என் கவிதை

உனக்கான கவிதை
எனக்குள் காத்து கிடக்கிறது
திசையெங்கும் திசைக்கு வெளியிலும்
வரையறைக்குள்ளும் விளிம்பிற்கு அப்பாலும்
சிதறிக்கிடக்கும் ஏதேனும்
ஒரு காகிதத்தில் முன்பே
எழுதியிருக்க கூடும்
என் எண்ணங்களை தாங்கி
சென்ற காற்று.
---------------------------------------------------------

No comments: