ஒற்றை பூ


இன்றுதான் பூத்திருந்தது
ஊதா நிறத்தில் ஐந்து இதழ்கள்
அருகில் சென்றேன் பறிப்பதற்கு
வெளிர் நிற உள்நாக்கில்
சிறுவண்டு இரண்டு
ஒன்றின் மேல் ஒன்றாக
கண்டேன்
நேற்றிரவு தொட்டபோது
திரும்பிபடுத்த நினைவு
உற்று
கவனித்து பின்
தொடாமல்
திரும்பினேன்

12 comments:

ஹேமா said...

கண்ணன் உங்கள் பக்கம் வந்திருக்கேன்.அருமையான எண்ண ஓட்டங்கள் சிதறிக் கிடக்கிறது.ஒவ்வொன்றும் ஒவ்வொரு சங்கதிகள் சொல்லியபடி.

"ஒற்றை பூ" சொல்லமுடியாவிட்டாலும் உணர்ந்துகொண்டேன்.

"நாள் ஒன்று" எம் கையில் நிலைக்காத நிமிடங்களை அழகாய் இரு வரியில் சொல்லிச் சிரிக்கிறது.

இன்னும் வருவேன்.

கண்ணன் said...

ஹேமா அவர்களுக்கு
மிக்க நன்றி
பெரும் ஊக்கத்தை உங்கள் வரிகள் எனக்கு தருகின்றன.
நன்றி.

சி.கருணாகரசு said...

ஒற்றைப் பூ வில் உணர்வு பூத்திருந்தது.

Anonymous said...

che..che... vandukkathal mmmhoom pookkathal...

கண்ணன் said...

மிக்க நன்றி தோழர் கருணாகரசுக்கு

கண்ணன் said...

மன்னிக்கவும் 'யாரோ '
உங்களின் வார்த்தை புரியவில்லை
அது சரி எதற்கு இந்த மறைதல்

கல்யாணி சுரேஷ் said...

solla mudiyatha unarvu maelidugirathu

rvelkannan said...

கல்யாணி சுரேஷ் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

உணர்வுகள் உயிரை வதைப்பவை என்பதை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். மறுக்கப்படல் சில வேளைகளில் தரும் வலியும், அவமானமும் தாண்டி மனிதாபிமானம் சொரியும் மனித இதயத்தின் சொற்கள் இவை. சரியாகப் புரிந்து கொள்ளாவிடினும் கூட நான் புரிந்து கொண்டது பிடித்திருக்கிறது.

நிறுத்தாதீர்கள்.

கண்ணன் said...

கனவுகளின் காதலன் வருகைக்கு நன்றி நன்றி நன்றி
உங்களின் ஊக்கத்துடன் தொடர்வேன்.

பா.ராஜாராம் said...

அபாரமான வெளிப்பாடு கண்ணா இது.வாழ்த்துக்கள்!

கண்ணன் said...

பா.ராஜாராம் அவர்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி!