திரும்புதல்

அண்ணன் அறிவுமதி பக்கங்களில்
பகிர்ந்து கொண்டிருந்தார் நமக்கான
வலியை*
சான்று சொன்ன புகைப்படத்தை
கேள்வி கேட்டு கொண்டிருந்தாள்
மடியில் அமர்ந்த என்சிறுமி
பத்து பனிரண்டு படத்தில்
இயன்ற அளவு கைகளிலும்
கொள்ளாத அளவு மனதிலும்
கனங்களை கொண்டிருந்தார்கள்
"இவங்கள யாருப்பா ''
'நம்ம சொந்தகாரங்க '
"இவ்வளவு பேர் எங்கேயிருந்து வராங்க"
'அவங்க ஊர்லயிருந்து '
"திரும்பி எப்ப போவாங்க "
'......'

(*வலி - இலட்சியக்கவி அறிவுமதி - தமிழ் மண் வெளியிடு )

10 comments:

Kalyani Suresh said...

அண்ணன் அறிவுமதி பக்கங்களில்
பகிர்ந்து கொண்டிருந்தார் நமக்கான
வலியை*

100% உண்மைதான் கண்ணன்.

கண்ணன் said...

கல்யாணி சுரேஷ்க்கு நன்றி

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கனங்களை சற்று இறக்கிவைத்து மூச்சு விடட்டும் அவர்கள்.

தொடருங்கள்...

ஹேமா said...

கண்ணன் இவைகள் படங்களா...இல்லை ஈழத்தமிழனின் ஆவணப் பதிவுகளா.சின்னவளுக்கும் சொல்லி வையுங்கள் தோழரே.

கண்ணன் said...

நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி

கண்ணன் said...

ஹேமா -விற்கு நன்றி
//ஈழத்தமிழனின் ஆவணப் பதிவுகளா.சின்னவளுக்கும் சொல்லி வையுங்கள்//
புரிய வைப்பதும் எனது கடமையே தோழி

சி.கருணாகரசு said...

தொண்டையடைக்கும் கனமான விரிகள், அண்ணனுக்கும் உங்களுக்கும் .............. வலியை பராட்ட முடியவில்லை தோழா.

கண்ணன் said...

சி.கருணாகரசு-க்கு
என்று அடைப்புகள் நீங்கும் தெரியவில்லை தோழா ,
தெற்கில் இருந்து வரும் காற்றில் இன்னும் இன்னும் ரத்த வாடையும் பிணவாடையும் அடித்து கொண்டு தான் இருக்கிறது

sweetsatheesh said...

சின்னவளுக்கு மட்டுமில்லை தமிழ் அகத்தில் சிறு மனது கொண்டோருக்கும் ...புரிய வையுங்கள் தோழரே

கண்ணன் said...

வருக வருக நண்பர் சதீஷ் அவர்களே
//புரிய வையுங்கள் தோழரே//
'புரியவைப்போம்' தோழரே