பெருநகர சாலையில்


பெருநகர சாலையில்
கைக்கொத்து பூக்களுடன்
சாலையைக் கடக்க முயலும் சிறுமி.

பூக்கள்
கலவை வண்ணங்களில்
பூக்களாய் மட்டுமேயிருந்தன.
இதழோரப் புன்னகையில்
ஒன்றியிருந்தார்கள் பூக்களும் சிறுமியும்.

துளியும் சிதறாத கவனத்தில் சிறுமியும்
சிறுமி  மீது நானும் ...

உங்களின்
வாகனத்தை சில நிமிடங்கள் நிறுத்திவிடுங்கள்
சப்தமின்றி.
வன்சப்தங்களில்
மென்இதழ்களும் சுருங்கிவிடும்.

நுகராத பூக்கள்
தெய்வ திருவடி தாயின் மடி
தம்பி பாப்பா பிஞ்சு விரல்கள்
அல்லது
கல்லறையைக் கூட சேரட்டும்.

உங்களின் அயராத வேட்டையில்
உங்களின் அடங்காத வேட்கையில்
உங்களின் அவசர வாழ்வில்
பூச்சிறுமியை உதிர்த்துவிடாதீர்கள்
தயவு செய்து .... 

நன்றி : உயிரோசை 

18 comments:

Geetha said...

ரொம்ப பிடிச்சது.

நிலாமகள் said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க ... வாழ்த்துகள்!

சுந்தர்ஜி said...

சிறுமியும் பூங்கொத்தும் ஒருபொருட்பன்மொழிதானே!அழகான கவிதையும் அழகான நேர்த்தியான வடிவமும் நெஞ்சை அள்ளுகிறது வேல்கண்ணன்.பெருநகரச் சாலையில் நகராக் காட்சியாய் இருக்குமிது.சபாஷ்.

Ashok D said...

மண்குதிரையின் கவிதைபோல பேசுகிறது...

நடுவில் கொஞ்சம் பற்றுதலற்று இருந்ததது.. (எனக்கு)

நல்லாயிருக்குங்க :)

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

பின்னி எடுக்கிறீர்கள் :) அழகான கவிதை, முடிவு வரும் வரை மனதில் ஒரு திகில் இருந்தது :)

உயிரோடை said...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க வேல்கண்ணன்

ஹேமா said...

கண்ணன்...பெருநகரங்களில் மனித நிலை மறந்து நிறுத்தாத வண்டிகளுக்கு ஒரு பூங்கொத்து இந்தக்கவிதை !

Anonymous said...

அட்டகாசம்.

RAMESH said...
This comment has been removed by the author.
RAMESH said...

அட்டகாசம்.

"உழவன்" "Uzhavan" said...

ரொம்ப நல்லாருக்கு நண்பா..

Sugirtha said...

மலரின் மென்மை ஒத்த கவிதை :)

rvelkannan said...

நன்றி கீதா முதல் வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி நிலா மகள் வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி சுந்தர் ஜி உங்களின் தொடர் வாசித்தலுக்கும் வாழ்த்திற்கும்

நன்றி நண்பர் அசோக்,
'மண்குதிரை'. மிக சிறந்த கவிஞனுடன் ஒப்பிட்டமைக்கு நன்றி
அவர் கவிதையின் தாக்கம் எனக்கு நிறையவே இருக்கிறது.

rvelkannan said...

நண்பர் கனவுகளின் உங்களின் வருகையிலும் வாழ்த்திலும்
நான் நிறையவே ஊக்கம் பெறுகிறேன். நன்றி நண்பரே

நன்றி உயிரோடை உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்

நன்றி ஹேமா உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்

நன்றி ரமேஷ் வருகைக்கும் கருத்திற்கும்

நண்பர் உழவன் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் அன்பும்

வாங்கா சுகிர்தா எனது நன்றியும் அன்பும் நிறையவே ....

கமலேஷ் said...

நல்ல கதையோட்டம் இருக்கும் கவிதை

rvelkannan said...

நண்பர் கமலேஷின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் அன்பும்

arasan said...

ரொம்ப நல்லா இருக்குங்க ....

Unknown said...

//இதழோரப் புன்னகையில்
ஒன்றியிருந்தார்கள் பூக்களும் சிறுமியும்//
Super! :-)