பேரொளி முடிவில் 
அடரிருள் அப்பிக்கொள்கிறது 
மென்பக்கத்தின் மறுபக்கம் வன்பக்கம் 
என்பது எதனின் விதி 
உன் குரல் மட்டுமே புழங்கிச் செல்லும் இரவுக்கென 
நீயில்லாத பகலை கடப்பதெனக்கு இயல்பானது
விடைபெற்று செல்லும் உன்னிடத்தில்
கரைபுரளும் காதலும் உண்டெனக்கு
இனி என் பொழுதுகள் எதன் கொண்டும்
காத்திருப்பவை அல்ல

No comments: