வேல் கண்ணன்
இலை இலையாய் மாறிக்கொண்டிருக்கிறேன் காற்றின் போக்கில் அசைவதை தெரிந்துக்கொள்ள..
அசைந்தாடும் தன்முனைப்பு
என் வீட்டின் மரமொன்று
காற்றின் இசைவால்
பக்கத்து வீட்டில்
விதை தூவியது
பொழுதொன்றில்
துளிர்த்து
படர்ந்து
வளர்ந்தது.
முன்னோர்களின் வரிசையில்
என் மரம்.
'என்னிடமிருந்து பெற்றாய்'
ஏளனமாக பார்த்தேன்
இரு மரங்களும்
எண்ணிக்கொண்டன
'நாம்' என்று.
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment