பறத்தல்

(அகநாழிகை அக்டோபர் 2009 இதழில் வெளியான கவிதை)

சட்டையின் முன்
வரையபட்டிருந்த
மரமொன்றிலிருந்து பறவைகள்
ஒவ்வொன்றாய்
பின் விரிந்திருந்த
கிளையில் அமர்ந்தன


கிளை
பறவைகளானது

எங்கும் நிரம்பியிருந்தது
சப்தங்களால்
வேறு ஒரு நாளில்
பறவையற்ற மரம்

சாய்ந்த பொழுதிலிருந்து
நிசப்தமானது

பரந்த கிளை
மட்டும்
வெறுமையாய்.

நன்றி: அகநாழிகை

9 comments:

  1. நல்லா இருக்கு கண்ணன்.

    ReplyDelete
  2. அருமையாய் இருக்கு வேல்கண்ணா.அகநாழிகைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. சிறப்பான படைப்பு, வாழ்த்துக்கள் நண்பரே.

    ReplyDelete
  4. கவி கட்சி அருமை தோழரே.

    ReplyDelete
  5. தலைவா! கொஞ்சம் மீனிங்
    சொன்னீங்கன்னா நன்னாருக்கும்!

    இல்லை, இது 'அனுபவிக்கணும், ஆராயக்கூடாது'
    மேட்டரா?!

    -கேயார்

    ReplyDelete
  6. கண்ணன் வாழ்வின் யதார்த்தம் கவிதை வரிகள்.இருக்கும் வரைதான் இருப்பு.

    மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. கல்யாணி சுரேஷ்க்கு நன்றி

    மண் குதிரையின் தொடர் வாசிப்புக்கு நன்றி

    பா.ரா -வுக்கு நன்றி

    நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி

    தோழர் கருணகரசுக்கு நன்றி

    தோழி ஹேமா வுக்கு நன்றி
    Wish You The Same Hema
    ********************************
    நண்பர் கேயார் க்கு நன்றி
    இன்னும் சில நாட்களில்.. நீங்கள் கேட்ட விளக்கம்
    தருகிறேன்
    தங்களது e-mail முகவரி தரவும்.

    ReplyDelete