மெளன புரிதல்

























உனக்கும் எனக்கும் பொதுவானவை
மெளனம்
இருப்பினும்
நீ
மெளனித்த வேளைகள்
என்னை கலவரப்படுத்துகிறது
நான்
மெளனித்த வேளைகள்
உன்னை சந்தேகிக்கவைக்கிறது

எண்ணற்ற வார்த்தைகள்
நிறைவு செய்வதாக
நம்பி கொண்டிருக்கிறோம் இருவருமே
வார்த்தைகள் சேர சேர
உன்னிலிருந்து நானும்
என்னிலிருந்து நீயும்
செல்கிறோம்
வெகுதூரத்துக்கு அப்பால்

கடக்கவியால தூரங்கள்
எதிர்பாரா திருப்பத்தில்
முடிவடைவதை போன்ற
மெளனத்தில் வாழ்கிறது
நமக்கானவை அனைத்தும்

14.12.2009 உயிரோசை இணைய இதழில் வெளியான கவிதை
நன்றி : உயிரோசை

22 comments:

  1. //நீ
    மெளனித்த வேளைகள்
    என்னை கலவரப்படுத்துகிறது
    நான்
    மெளனித்த வேளைகள்
    உன்னை சந்தேகிக்கவைக்கிறது//


    நீ மௌனித்த வேளைகள்
    என்னைக் கலவரப்படுத்துகின்றன...
    நான் மௌனித்த வேளைகள்
    உன்னைச் சந்தேகிக்க வைக்கின்றன..

    எது சரி?

    -கேயார்

    ReplyDelete
  2. //வார்த்தைகள் சேர சேர
    உன்னிலிருந்து நானும்
    என்னிலிருந்து நீயும்
    செல்கிறோம்
    வெகுதூரத்துக்கு அப்பால்//

    எனது நண்பனின் நினைவு வருகிறது கண்ணன்.

    ReplyDelete
  3. நல்ல கவிதை வேல்கண்ணா.ரொம்ப பிடிச்சிருக்கு.உயிரோசைக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நண்பரே,

    வார்த்தைகளைவிட அர்த்தம் செறிந்தவைதாம் மெளனங்கள். நல்ல கவிதை நண்பரே.

    ReplyDelete
  5. ரொம்ப நல்லா இருக்குங்க... ரசித்தேன். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. மௌன‌ம் மிக‌ கொடிய‌து. வார்த்தைக‌ளினும் வ‌லிமை வாய்ந்த‌து. உயிரோசையில் வெளியான‌மைக்கு வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  7. நல்லா இருக்குங்க...வாழ்த்துக‌ள்.

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்.... தோழரே

    ReplyDelete
  9. Nice one from you. I like it so much.

    ReplyDelete
  10. இன்றைய கவிதை நண்பர் கேயார்க்கு வணக்கமும் நன்றியும்
    //நீ மௌனித்த வேளைகள்
    என்னைக் கலவரப்படுத்துகின்றன...
    நான் மௌனித்த வேளைகள்
    உன்னைச் சந்தேகிக்க வைக்கின்றன//
    இப்படியாக இருந்தால் பின்வரும் வரிகளில் சில வார்த்தைகளை மாற்ற வேண்டி வரும் .
    உங்களின் e-mail முகவரி முன்பே கேட்டதாக நினைவு
    இருப்பினும், மிக்க நன்றி கேயார்க்கு.
    ******************************
    வாங்க கல்யாணி, உங்களின் நினைவுகள் நண்பனை பற்றி
    எனது இந்த கவிதை ஒரு தோழியை பற்றி. நன்றி கல்யாணி
    ********************
    பா.ராவிற்கு நன்றியும் அன்பும். உங்களின் வேலை பளுவிற்கு இடையில் எனக்கு வாழ்த்து சொல்லியதற்கு மிக்க நன்றி.
    **************
    நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றியும் அன்பும்
    *******************
    பலா பட்டறையின் முதல் வருகைக்கும் தொடர்தலுக்கும்
    கருத்துக்கும் மிக்க நன்றி.
    ******************
    வாங்க உயிரோடை , உங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
    //மௌன‌ம் மிக‌ கொடிய‌து// வலி மற்றும் வலியது கூட.
    ******************
    செல்வராஜ் ஜெகதீசனுக்கு நன்றியும் வாழ்த்துகளும்(உங்களின் இரண்டாவது கவிதை தொகுப்பிற்கு)
    **********************
    தோழர் சி. கருணகரசுக்கு நன்றியும் அன்பும்
    ******************
    நண்பர் கிருஷ்ண பிரபுவிற்கு நன்றியும் அன்பும்

    ReplyDelete
  11. //வார்த்தைகள் சேர சேர
    உன்னிலிருந்து நானும்
    என்னிலிருந்து நீயும்
    செல்கிறோம்
    வெகுதூரத்துக்கு அப்பால்//

    கண்ணன் முதல் பந்தியில் மௌனத்தால்தான் கலவரமும் சந்தேகமும் என்கிறீர்கள்.பிறகு வார்த்தைகள் சேர்வதால் தூரமாகிறோம் என்கிறீர்கள்.இந்த நிலை சரியா ?

    ReplyDelete
  12. ஹேமா விற்கு நன்றியும் அன்பும்.
    முதல் பத்தியில் //மௌனத்தால்தான் கலவரமும் சந்தேகமும்// என்று 'நினைத்து' கொள்கிறேன்
    இந்த புரிதல் தவறு எனக் கொள்க. மெளனம் அப்படியல்ல. அதனால் தான் கடைசி வரியில் இப்படியா முடியும்
    //மெளனத்தில் வாழ்கிறது
    நமக்கானவை அனைத்தும்//

    ReplyDelete
  13. //நீ
    மெளனித்த வேளைகள்
    என்னை கலவரப்படுத்துகிறது
    நான்
    மெளனித்த வேளைகள்
    உன்னை சந்தேகிக்கவைக்கிறது/

    மெளனத்தின் மடியில் வார்த்தைகள் கட்டுண்டு கிடக்கின்றன.. மிக அருமை கண்ணன்..வாழ்த்துக்கள்..


    http://niroodai.blogspot.com

    ReplyDelete
  14. அனைத்து வார்தைகளுமே அருமை வேல் கண்ணன் எதை சொல்ல எதை விட அற்புதம்

    ReplyDelete
  15. //எண்ணற்ற வார்த்தைகள்
    நிறைவு செய்வதாக
    நம்பி கொண்டிருக்கிறோம்//

    வே.க.

    உண்மை மின்னும் வரி”கள்”!

    ReplyDelete
  16. Please note our email id
    inraiyakavithai@yahoo.co.in

    -Keyaar

    ReplyDelete
  17. 'அன்புடன் மலிக்கா ' முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    'thenammaillakshmanan' முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    நண்பர் சத்ரியனக்கு வணக்கமும் நன்றியும் நிறைய அன்பும்
    'இன்றைய கவிதை' நண்பர் கேயார்க்கு நன்றி
    தியாவின் பேனாவின் முதல் வருகைக்கும் தொடர்தலுக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  18. அப்பா!!! எவ்வளவு விஷயங்கள் பேசுகிறது உங்களின் ஒவ்வொரு கவிதையும்...
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  19. கமலேஷ் , வாங்க உங்களின் வருகைக்கும் தொடர்தலுக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  20. நன்றி வேல்கண்ணன்

    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  21. நன்றி தேனு
    எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete