நிழற்படம்



எல்லா தடங்களையும்
சேகரித்துக்கொண்டு செல்கிறது
காலம்.



மவுனங்கள்
மீதேறி கடக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும்
சறுக்கி சாய்ந்து விழுகிறது என் கணைகள்.
மரத்தின் உச்சியை வெறித்துக்கொண்டே
உட்கார்ந்திருக்கும்
அந்த பெரியவரை/அவரை பார்த்துக்கொண்டுயிருக்கும் என்னை
மேலதிகமாக என்ன நினைத்துவிட முடியும்
'பைத்தியம்'  என்பதை தவிர.



பின்மதிய வேளையின்
கடைவாய் எச்சில் ஒழுகும் உறக்கத்தை
திடுக்கிட்டு எழுப்பும் கனவுகளை
துரத்தியபடியே ஓடுகிறது பின்வரும் பொழுதுகள்.
மறக்க நினைத்த நிகழ்வுகளை
நினைவுப்படுத்தி செல்கிறது தூரத்திலிருந்து
கேட்கும் கனரக வாகனத்தின் உறுமல் சத்தம்.
கொஞ்சம் சிரிப்பும் நிறைய நிறைய வெளிச்சமுள்ள
அந்த நிழற்படம் இமை விட்டு விலகவேயில்லை
எழுதுவதற்கான வேகம்
தொடர்ந்து வரும் அடர் வெறுமை
தூக்கியெறிய சொல்கிறது
சீழ் பிடித்த நினைவுகள்
முதலானவைகளை.

(இசைபிரியாவிற்கு.... )

நன்றி : உயிரோசை 


13 comments:

  1. நண்பரே,

    விலகிச்செல்லாத நினைவுகளின் வலிபொதிந்த வரிகள்.

    ReplyDelete
  2. //மவுனங்கள்
    மீதேறி கடக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும்
    சறுக்கி சாய்ந்து விழுகிறது என் கணைகள்.
    //
    அருமை!

    //மறக்க நினைத்த நிகழ்வுகளை
    நினைவுப்படுத்தி செல்கிறது தூரத்திலிருந்து
    கேட்கும் கனரக வாகனத்தின் உறுமல் சத்தம்.
    //
    நினைவுகளை ஏதோ ஒன்று தூண்டிக் கொண்டே இருக்கிறது எப்போதும். அருமையான விவரிப்பு.

    ReplyDelete
  3. //மவுனங்கள்
    மீதேறி கடக்க நினைக்கும் ஒவ்வொரு முறையும்
    சறுக்கி சாய்ந்து விழுகிறது என் கணைகள்.//

    அருமை வேல்கண்ணன்.

    ReplyDelete
  4. ஒரு தாங்கயிலாத துயரத்தை நிழற்படத்தின் சுருள் சுருளான நினைவுகள் கனவின் மூலமோ மறக்க நினைக்கும் கனரக் வாகனத்தின் உறுமலின் மூலமோ சிரிப்புக்குப் பின்னே ஒளித்து வைத்திருக்கிறது குறுகிய வார்த்தைகள் கொண்டு உலுக்கிச் செல்லும் இந்தக் கவிதை போல.

    என்ன வேல்கண்ணன் பெருத்த இடைவெளி? நலம்தானே?

    ReplyDelete
  5. அடர் கவிதையாக இருக்கின்றது. நிறைய விசயத்தை ஒரே கவிதையாக்க வேண்டாம் என்பது தாழ்மையான வேண்டுகோள்

    ReplyDelete
  6. துயரத்தின் வலி.
    வலி வந்தாதான் கவிதையே எழுத அமருவீங்க போல வேல்கண்ணன்.

    ReplyDelete
  7. //மறக்க நினைத்த நிகழ்வுகளை
    நினைவுப்படுத்தி செல்கிறது தூரத்திலிருந்து
    கேட்கும் கனரக வாகனத்தின் உறுமல் சத்தம்.//

    அழுத்தமான கவிதை..பாரமும் அழுத்தியது...
    மிக அழகான கோர்வை வரிகளில் வலி இருந்தாலும்...

    ReplyDelete
  8. புகை படிந்த அந்த கருப்பு வெள்ளை நிழற்படம் காலக் கண்ணாடியாய் இன்னும் இருக்கிறது பல வீடுகளில் நினைவுகளை சுமந்தபடி.

    ReplyDelete
  9. விடுபட்டு போனவைகளில் சிலவற்றை வந்து வாசித்தேன் கண்ணா. பிரமாத படுத்துகிறீர்கள் என்றால் கொஞ்சம் சத்தமான வார்த்தை. ஆனாலும், அமைதியாக என் சந்தோசத்தை வெளிப் படுத்த இயல்வதில்லை. பேசாமல் போயிருந்திருக்கலாம். இந்த இடத்திற்கு பொருத்தமாவது இருந்திருக்கும்.

    ReplyDelete
  10. வலிக்கிறது. சங்கடப்படுத்துகிறது. வலிக்கிறது.

    ReplyDelete
  11. எனது விலகாத தோழமையான ...
    நண்பர் கனவுகளின் காதலன்

    நண்பர் ஜி

    சுகிர்தா

    காதல் சத்ரியன்

    சுந்தர் ஜி
    (நலமாக இருக்கிறேன் : எனது வலிகளை போல் )

    சைக்கிள்

    உயிரோடை
    (எல்லா உரிமைகளும் உங்களுக்கு உண்டு :
    தயவு செய்து தாழ்மையான வேண்டுகோளை தவிர்க்கவும்)

    கமலேஷ்
    (அதே தான் நண்ப , ஆனாலும் குறைவதில்லை )

    ஹேமி

    நண்பர் சிவகுமாரன்

    அண்ணன் பா. ரா
    (சில குற்ற உணர்வுகளுடன் நானும் மவுனமாக உங்களின் அருகில் கிடக்கிறேன் அண்ணே )

    ஹரிணி

    உங்கள் அனைவருக்கும் மிகுந்த அன்பை வெளிபடுத்தபடுத்த முடியாமல் தவிக்கிறேன்

    ReplyDelete