மிச்ச உயிர்


நின்றிருப்பது நிராகரிக்கப்பட்ட நகரத்தின்
மறுக்கப்பட்ட பகுதி
அள்ளி பருகுவதற்கு தகதகவென அமிலக்கோடை நதி 
முகவரியற்ற  கற்றையான அணு உலைக்காற்று
வெட்ட வெளிதனில் Venomous நெளிகிறது  
பாதி எரிக்கப்பட பிணங்களின் துர்வீச்சம்
இளைப்பாற விடுவதில்லை
முன் எப்போதோ உதிர்த்த வார்த்தைகள்
சிதறிக்கிடக்கின்றன அவரவர்களின்
வாசனையுடன்
அவற்றை நீர்த்துளிகளை விடவும் குறைவாகவே
பயன்படுத்திக்  கொள்கிறேன்
இரவானால் மாய்ந்து போன நட்சத்திரங்களின் ஆவிகள்
எனது போர்வைக்குள் ஒளிந்து கொள்ள முயல்கின்றன
சிக்கு விழுந்த நூல்கண்டு சட்டென்று தன்னை
விடுவித்துக்கொண்டு
சாட்டையென மாறி சுளீர் விளாசலில் திசையெங்கும்
துரத்துகிறது
பெருந்தழலில் பற்களை இறுக கடித்துக்கொண்டே 
உன் கன்னக்குழி மச்சத்தை 
நினைக்கையில் 
தொடர்ந்த  கருஞ்சுருள்  ஓடி ஒளிந்து கொள்கிறது.

நன்றி : கொம்பு
நன்றி : கவிஞர் வெய்யில்

9 comments:

  1. கவிதை நன்று மேலும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  2. நிறைய யோசிக்க வைத்த கவிதை.
    venomous - விஷப்பாம்பு என்றே இருக்கலாமே .

    ReplyDelete
  3. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. நன்றி உயிரோடை
    நன்றி சிவகுமாரன்
    நன்றி உலக சினிமா ரசிகன்
    (படித்தேன் நண்பா )

    ReplyDelete
  5. //இரவானால் மாய்ந்து போன நட்சத்திரங்களின் ஆவிகள்
    எனது போர்வைக்குள் ஒளிந்து கொள்ள முயல்கின்றன//

    வார்த்தைகளின் நெய்தலில்
    கவிதை உயிர்ப்புடன் இருக்கிறது.
    வாழ்த்துகள் நண்பா.

    ReplyDelete
  6. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
  7. அன்புள்ள கண்ணன்

    நிறைய வாசிப்புத்தளங்களுக்கும் விரிந்த மாறுபட்ட சிந்தனைகளுககும் அழைத்துச் செல்கின்றது அடர்ததியான சொற்களைக் கொண்ட உங்கள் கவிதை. எனக்கு மனதிற்குள் ஈழம் நினைவுக்கு வருகிறது. அதன் இன்றைய நிலை என்னவென்று தெரியவில்லை.

    முன் எப்போதோ உதிர்த்த வார்த்தைகள்
    சிதறிக்கிடக்கின்றன அவரவர்களின்
    வாசனையுடன்
    அவற்றை நீர்த்துளிகளை விடவும் குறைவாகவே
    பயன்படுத்திக் கொள்கிறேன்

    இந்த வரிகள் என்னை சலனப் படுத்துகின்றன வேறுவேறு சிந்தனைகளின் சங்கடங்களை அள்ளித் தெளிக்கின்றன.


    நின்றிருப்பது...என்பதுதான் நின்றிப்பது என பதிவாகியிருக்கிறது என நினைக்கிறேன்.
    சந்திக்கலாம் வாய்ப்பமைவில்.

    ReplyDelete
  8. மிகுந்த நன்றி தோழர் மபா. தமிழன் வீதி

    மிகுந்த நன்றி ஹென்றி J ..

    மிகுந்த நன்றியும் அன்பும் ஐயா சென்னை பித்தன்

    மிகுந்த நன்றி ஹரிணி சார்
    உங்களின் புரிதலுக்கு நன்றி
    பெரும் ஊக்கம் கிடைக்கிறது உங்களின் சொற்களில்
    (திருத்தி விட்டேன் சார் , நன்றி )

    ReplyDelete