நீ வராத மாலை
வெயில் பாயை உதறி சுருட்ட
தொடங்கிவிட்டது
தொடங்கிவிட்டது
கையசைக்காமல் பறந்து சென்றது
பறவை கூட்டம்
பறவை கூட்டம்
நீர்த்து போன இறுதி சொட்டும் உறுதிப்படுத்தியது
நகர்ந்து வந்த இந்த நாளை நரகமாய்
வெந்து கொதித்த பொழுதுகள்
துளிர்த்த சில பூக்களையும் பிராண்டின
கண் தெரியாத பாலியம் நடுநிசியின்
கூரிய நகங்களால் விரட்டி அடிக்கப்பட்டது
கூரிய நகங்களால் விரட்டி அடிக்கப்பட்டது
எனது
வனத்தின் எல்லை பகுதியிலிருந்த
நெடுமரங்களும் நிலாக்களும் சரிந்தன
துரோகத்தின் கருகல் நாசியை தொட்டன
வேற்றுஆட்களின் நடமாட்டம் தெரிகிறது
உன்
சுகந்த விழிகள் உழுத பாறைகளில்
சுரக்கும் பாலில் பொடித்து
பருகுவேன்
நஞ்சான
இந்த
காத்திருத்தலை.
நன்றி : 361˚ ( 3 'வது - சிற்றிதழ்)
நன்றி : நிலா ரசிகன்
நன்றி : நிலா ரசிகன்
காத்திருத்தலின் நஞ்சு அமிர்தமாய் இறங்குகிறது மனதுள்.
ReplyDeleteஎப்போவாவது எழுதினாலும் இப்படி எழுதி எழுதி ஆளைத் தீர்த்துக்கட்டிடறீங்க சாமியோவ்.
அடடா!
ReplyDeleteநஞ்சான காத்திருத்தல்?!
ReplyDeleteகாத்திருத்தலில் சுகம் காணறவங்க இல்லையா நம்மாளுங்க!
உருக்குகிறது வேல், கவிதை.
நன்றி சுந்தர் ஜி
ReplyDeleteநன்றி சத்ரியன்
நன்றி ப. தியாகு
'செத்துடலாம்' போலிருந்த காத்திருத்தலின் தோல்வி உணர்வயப்படுகிறது வாசிப்பினூடே! பாயைச் சுருட்டிச் சென்ற சூரியனும் சூரியனை சென்றடையக் கருதி கருகிக் கருகி உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையும் போல் மறுபடியுமொரு நாள் காத்திருப்பு தொடரும்.
ReplyDelete