உணர்





பொழுது சாய்வதற்குள்
உலர்ந்துவிடும் ஆடை
இரவானபின்னும்
ஈரம் சொட்டவில்லை 


புலர்தலை தீண்டாமல்
நீள்கிறது நள்ளிரவு 
வற்றாமல் மிச்ச
மிருக்கிறது
நூ
      லி
ழை  
ஆறு
சலித்து சளைத்து
துவள்வதற்கு பிறவியோன்றும்
பதர் அல்லவே 
மிகை சொல்லும் பழிகளை
புதைப்பதற்கு சவப்பெட்டியொன்றும் 
எனக்கான கப்பலும் செய்து
கொண்டிருக்கிறேன்


நன்றி : வெயில் நதி - முதலாம் சிற்றிதழ் 

4 comments:

  1. வற்றாமல் மிச்ச
    மிருக்கிறது
    நூ
    லி
    ழை //
    மிகை சொல்லும் பழிகளை
    புதைப்பதற்கு //

    ம்ம்.......! ட‌ச்சிங்.

    ReplyDelete
  2. கொஞ்ச‌ம் புரிந்தும் புரியாத‌து போல‌ இருக்கு

    ReplyDelete
  3. புரிகிறது...........

    ReplyDelete
  4. கடைசி வரிகளில் தணல்.

    ReplyDelete