பெட்டகம்

நினைவடுக்குகளில்
ஒரு பெட்டகம் செய்தேன்
முத்தங்களை சேமிப்பதற்கு.
சிறுதுளி ஈரமாகட்டும்
பெருங்காமத்தின்
பின்மிச்ச நுரையாகட்டும்
அவ்வப்போதே அனைத்தும்
பத்திரப்படுத்திக் கொண்டேன்.

அவசர கதியின்
இதழ் உரசலாகட்டும்
ஆழமான உயிர்
உறிஞ்சலாகட்டும்
சிதறாமல்
அணைக்கட்டினேன்.
விடியலின் இறுக்கத்தையும்
மாலையின் தழுவலையும்
உறையச்செய்தேன்.

வீண் வேலையென்றே
பரிகாசித்தன உன் அடுத்த
முத்தத்தின்
இதழோரக் குவிப்பு.

22.03.2010 உயிரோசை இணைய இதழ்

நன்றி : உயிரோசை

              *   *   *  


2 comments:

  1. கடவுளே இந்த சைட்ட இதுவரைக்கும் பாக்காமலா இருந்திருக்கேன்..
    நல்ல வேலை இப்பவாவது நீங்க கிடைசிங்களே..

    ReplyDelete
  2. நன்றி கமலேஷ்

    ReplyDelete