
உன்
தெரு மூலை குப்பை தொட்டியில்
கிழித்தெறியப்படும் வரை
** ** ** **
கடிதத்தில் குறிப்பிட்ட
நாள் நேரத்தில்
தான்
வந்திருந்தேன்.
காத்திருந்தோம்
உனது வீட்டு
வரவேற்பு அறையில்
நானும்
வாங்கி வந்த
ஆப்பிள்
யாழினிக்கு கிரீம் பிஸ்கட்
கொஞ்சம் பூக்கள்
மேசையின் மேல்
இன்னமும்
பிரிக்கப்படாத
என் கடிதமும்.
நடையோசை
அறிந்து
கடிதத்தை
மறைத்து கொண்டேன்
உன்
மறுத்தலின்
பாவனையை
நான் அறிவேன்
என் கடிதமோ
பாவனையின்
அவசியம்
புரியாமல் இருந்தது.
உன்
தெரு மூலை குப்பை தொட்டியில்
கிழித்தெறியப்படும் வரை ..
நல்லாயிருக்கு!
ReplyDeleteஇனம் புரியாத வலியை ஏற்படுத்துகிறது.
ReplyDeleteதோழர் சி.கருணாகரசு - க்கு நன்றி
ReplyDeleteகல்யாணி சுரேஷ்-க்கு நன்றி
ReplyDeleteவலிகளுக்கு காலம் தான் மருந்திட வேண்டும்
கடிதத்தை கிழிக்க முடிந்த விரல்களிற்கு இதயத்தின் உணர்வுகளை கிழித்து இலகுவாக குப்பைதொட்டியில் வீசிட முடியுமா என்ன?
ReplyDeleteகிழிக்க கிழிக்க வீம்புடன் உயிர்க்கும்.
அழகு.
கண்ணன் கடிதம்தான் ஏதோ ஒரு காரணத்திற்காகக் கிழிக்கப்பட்டதே தவிர மனம் இல்லைத்தானே .
ReplyDeleteஉண்மை அன்பை யார் என்னதான் செய்யமுடியும்.காத்திருங்கள்.
கனவுகளின் காதலன் வருகைக்கு மிக்க நன்றி
ReplyDelete//கிழிக்க கிழிக்க வீம்புடன் உயிர்க்கும்//
உண்மைதான். நன்றி
ஹேமா-விற்கு நன்றி
ReplyDelete//உண்மை அன்பை யார் என்னதான் செய்யமுடியும்.காத்திருங்கள்//
உண்மை அன்பின்
மீது நம்பிக்கை கொண்டு காத்திருக்கிறேன். நன்றி
கிழிந்த கடிதம் பற்றி
ReplyDeleteபகிர்ந்த நண்பனிடம்
மறைத்து சிரிக்கிறேன்
கிழிந்த(கலைந்த ) வாழ்வை...
Thanks to friend satheesh -avl.,
ReplyDeleteIngu Kadithathin thanmaiyum natpin kapatrapattathu. Unmai thane
ReplyDeleteDear Prem,
ReplyDeleteits also your view. that's good and ok