புலப்படா வெளிச்சம்


முகமறியா மனிதர்கள்
பெயர் தெரியாத ஊர்
கேட்பாரற்று கிடக்கிறது
உடல்.

வாசனையின் உணர்வோ
உணர்வின் காட்சிகளோ
ஏதுமற்று இயங்கும்
சுவாசம்.

இடையிடையே
வந்து போகும் வெளிச்சங்களின்
நிறம் எதுவெனப் புலப்படவில்லை.

கேட்டதையும் கிடைத்ததையும்
இனமறியவில்லை.

மனம் சோம்பிகிடக்கிறது
அறிவிக்கப்பட்ட
தோல்வியுற்ற கணத்தில்
ஆற்று மணலில் கால் பதிய
நடக்கத் தோன்றினும்
பேரமைதிக்கான களத்தில்
போராட சொல்கிறது காலம்.

பிப்ரவரி மாத சிக்கி முக்கி இணைய இதழில் வெளியான கவிதை

நன்றி : சிக்கி முக்கி

13 comments:

  1. நண்பரே,

    எல்லாம் சந்தர்பங்களைப் பொறுத்தது. தோல்வி என்பது எப்போதும் நிரந்தரமானது அல்ல. போராட்டம் என்பதும் முற்றிலுமாக அழித்து விடப்படக்கூடியதுமல்ல. உங்கள் வரிகள் அருமை.

    ReplyDelete
  2. கவிதை மிக அருமையாக இருக்கிறது தோழரே..வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

    ReplyDelete
  3. கவிதை முடித்த வரிகளில் கலக்கம் ஆதங்கம் ஆசுவாசம்.

    ReplyDelete
  4. வேலகண்ணண்,

    ஆற்று மணலில் கால் பதிய
    நடக்கத் தோன்றினும்
    பேரமைதிக்கான களத்தில்
    போராட சொல்கிறது காலம்.

    அருமை நண்பா

    நன்றி ஜேகே

    ReplyDelete
  5. க‌விதை ந‌ன்று வேல்க‌ண்ண‌ன். சிக்கிமுக்கியில் வெளியான‌மைக்கு வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  6. எனது அன்புற்குரிய நண்பர்கள்
    கனவுகளின் காதலன்,
    கமலேஷ்,
    ஹேமா,
    இன்றைய கவிதை ஜேகே,
    உயிரோடை லாவண்யா அனைவருக்கும் எனது நன்றியும் அன்பும்.

    ReplyDelete
  7. //பேரமைதிக்கான களத்தில்
    போராட சொல்கிறது காலம்.//

    பேரமைதிக்கே போராட வேண்டி இருக்கிறதே வேல் கண்ணன்

    ReplyDelete
  8. sசிறப்பா இருக்கு நண்பா

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அழகான கவிதை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. சிக்கி முக்கியிலே படித்தேன் , வாழ்த்துக்கள் நண்பரே !

    ReplyDelete
  11. விடுபட்டு போயிருந்த எல்லா கவிதைகளையும் வாசித்தேன் வேல்கண்ணா...

    நிறைய மிஸ் பண்ணிய உணர்வு.(வேலைப் பளுக்கள்)

    எதிர்காற்றில் மேடேறும் காளையின் மூச்சு வாங்கலில் வரும் நுரை போல..வாணி ஊத்திக் கொண்டே இருக்கு.

    கவிதை உலகில் பெரிய இடம் இருக்கு வேல்கண்ணா!

    வாழ்த்துக்கள் மக்கா!

    ReplyDelete
  12. கனவுகளின் காதலனின் கூற்றே என்னதும்.... மற்ற கருத்துரைகளை படித்துதான் ஒரு புரிதலுக்கு வந்தேன்... தோழரே.

    ReplyDelete
  13. அன்பு தேனு ,
    மிக்க நன்றி

    நண்பர் மண்குதிரைக்கு
    மிக்க நன்றி

    நினைவுகளுடன் நிகே
    முதல் வருகைக்கும் கருத்திற்கும் தொடர்தலுக்கும்
    மிக்க நன்றி

    ஜெனோவா ,
    முதல் வருகைக்கும் கருத்திற்கும்
    மிக்க நன்றி

    அண்ணன் பா. ரா விற்கு
    உங்களின் வார்த்தைகளும் வாழ்த்துகளும்
    பெரிதும் ஊக்கப்படுத்துகிறது
    என்றும் உங்களின் அன்பு வேண்டும்.

    தோழர் கருணகரசுக்கு
    மிக்க நன்றி

    ReplyDelete