அவரைப் பற்றி

சில
வாரங்களுக்கு முன்
அவர் வந்திருந்தார்
கனமான புத்தகத்துடன்


என்
அறையில் சிதறிக்கிடந்த
புத்தங்களில் மூன்றை
தேர்ந்தெடுத்தார்.


'படித்து விட்டீர்களா'
பதில் எதிர்பாராமல்
பேசவும் தொடங்கிவிட்டார்
கொண்டு வந்த
புத்தகத்தை பற்றி


'கண்டிப்பாக படித்துவிடுங்கள்'
விடைபெறும் போதும்


சில
நாட்கள் சென்றபின்
தேநீர் நிலையத்தில் சந்தித்தோம்
'படித்து விட்டீர்களா'
இப்பொழுதும்
பதில் எதிர்பார்க்கவில்லை
பேச தொடங்கிவிட்டார்
கொடுத்த புத்தகத்தை பற்றி


பிரிகையில்
'நாளை மறுநாள் வரேன், பேசுவோம்'
என்னவென்று
உங்களுக்கும் எனக்கும்
தெரிந்தது தானே

நன்றி :  தமிழ்த்தோட்டம்

13 comments:

  1. அருமை வேல் கண்ணன்.

    ReplyDelete
  2. ரசித்தேன் வேல் கண்ணன்.

    ReplyDelete
  3. நண்பரே,

    சிறப்பான வரிகள், எண்ணங்களைப் பகிர்தலின் தாகம் கூட தீர்க்கப்பட வேண்டி ஓட வேண்டியிருக்கிறது.

    ReplyDelete
  4. புரியவில்லை தோழா...


    ஜேகே

    ReplyDelete
  5. ஒய் பிள‌ட் சேம் பிள‌ட்?

    ம்ம் இப்ப‌டித்தானிருக்கிற‌து ப‌ல‌ விச‌ய‌ங்க‌ள் ந‌ம் வாழ்வின்.

    ReplyDelete
  6. முழுதாக பிடிபடவில்லையே நண்பா ;-(
    அலைபேசி எண்ணாவது தெரிந்திருந்தால் பேசியிருக்கலாம்தான் ...

    ReplyDelete
  7. இப்படி படிக்கப்படாமலும் பிரிக்கப்படாமலும் எத்தணை புத்தகங்கள் வேல் கண்ணன்

    ReplyDelete
  8. நட்பும் அன்பும்
    சூர்யா,
    செல்வராஜ் ஜெகதீசன் ,
    கனவுகளின் காதலன்
    ஜே. கே (மடலுக்கு பதில் இல்லை தோழர் )
    உயிரோடை லாவண்யா
    ஜெனோவா ( 9865887280 : இது எனது அலைபேசி எண்)
    தேனம்மை
    ஆகிய அனைவருக்கும்

    ReplyDelete
  9. வேல்,

    பலரையும் நினைவூட்டும் விதம்.... அருமை.

    ReplyDelete
  10. வாங்க சத்ரியா
    மிக்க நன்றியும் மிகுந்த அன்பும்
    ******************
    நளன் அவர்களுக்கு
    மிக்க நன்றியும் மிகுந்த அன்பும்
    ******************
    Bogy இணையத்திற்கு
    நன்றியும் வாழ்த்துகளும்

    ReplyDelete
  11. ரொம்ப நல்லாருக்கு வேல்கண்ணா!

    ReplyDelete
  12. மிக்க நன்றி பா.ரா

    ReplyDelete