தீராத இசை மீட்டலில்


மெளனவெளியெங்கும்
கிளைபரப்பி தவழ்ந்து படர்கிறது
தீராத இசையின் மீட்டலொன்று...
பிரக்ஞையற்ற உருவமொன்று
தன்வரையில் சோம்பிக்கிடக்கிறது
உதிராத காலச்சருகினில் இடையே
நுழைந்து கொள்கிறது நிகழ்வின் கணங்கள்.
நாளைய தினம் வாசிக்கப்படும்
தீர்ப்புகளைப் பற்றி அச்சமற்றுப் போகிறது.

இளம் பருவமொன்றின் படிமங்களை
சரம்கோர்க்கத் தொடங்குகிறது மனது..

நன்றி : உயிரோசை
               ஜூலை 2010 , உயிர் எழுத்து 
~ ~ ~

11 comments:

  1. நல்லாயிருக்குங்க

    ReplyDelete
  2. இளம் பருவமொன்றின் படிமங்களை
    சரம்கோர்க்கத் தொடங்குகிறது மனது..தீராத இசை மீட்டலில் :)

    ReplyDelete
  3. நண்பரே,

    அருமையான வரிகள்.

    ReplyDelete
  4. ரொம்ப நல்லாருக்கு வேல்கண்ணா.

    ReplyDelete
  5. நாளைய தினம் வாசிக்கப்படும்
    தீர்ப்புகளைப் பற்றி அச்சமற்றுப் போகிறது. //

    நாளைய தினம் வாசிக்கப்படும்
    தீர்ப்புகளைப் எண்ணி புன்னகைக்கிறது என் மனம்!

    கவிதைக்கு பாராட்டுக்கள் தோழரே.

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. //மெளனவெளியெங்கும்
    கிளைபரப்பி தவழ்ந்து படர்கிறது
    தீராத இசையின் மீட்டலொன்று...//

    ஆரம்பமே அனிச்சையாய் உள் நுழைகிறது வேல்கண்ணன்.

    ReplyDelete
  8. மிகுந்த ஊக்கத்தை தரும்

    D.R. அசோக்
    செல்வராஜ் ஜெகதிசன்
    ஆறுமுகம் முருகேசன்
    கனவுகளின் காதலன்
    பா. ராஜாராம்
    சி.கருணாகரசு
    தூரோகி
    சத்ரியன்

    மிகுந்த நன்றியும் அன்பும்


    --

    ReplyDelete
  9. இளம் பருவமொன்றின் படிமங்களை
    சரம்கோர்க்கத் தொடங்குகிறது மனது..
    THIS LINES VERY NICE SIR ---- RAMESH

    ReplyDelete
  10. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் ரமேஷ் ... தொடர் வாசித்தலுக்கு எனது அன்பும்

    ReplyDelete