நிர்வாணத்தை கவனித்தல்

சன்னலற்ற உள்தாழிடப்பட்ட அறையின்
கண்ணாடி முன் நிர்வாணமாய் நின்றிருந்தேன்.
உற்று கவனிக்கும் யாரோ
அருவெறுப்பான அழுகும்
என் நிர்வாணத்தைப்பற்றி பேசவும் கூடும்
அவர்களின் நிர்வாணத்தை மறைத்தபடி.
கேட்பவர்கள் தன் நிர்வாணத்தை
விடவும் பெரிதாக்கி கொள்ளலாம்
அவரவர்களின் அறையினுள் நுழையும் வரை.
கவனிக்க:
அவ்வறையை உற்று நோக்குபவனாகவும் நானிருக்கலாம்



நன்றி : தடாகம்

13 comments:

  1. அடடா.. நண்பா கொல்றீங்களே :)))

    ReplyDelete
  2. சிறப்பான வரிகள் நண்பரே.

    ReplyDelete
  3. உங்கள் கவிதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
    அக்கவிதைகளுக்கு அடியில்
    ஒரு சூட்சும நதி ஓடிக்கொண்டிருப்பதை
    உணரமுடிகிறது.ந

    ReplyDelete
  4. கவிதை இழுத்து செல்லும் பரிமாணங்கள் பற்பல சகோ

    ReplyDelete
  5. இந்த கவிதையில் வரும் அறை , நிர்வாணம் மற்றும் உற்று நோக்குபவன் எல்லாமே பொது சொத்துதானே நண்பரே.
    ரொம்ப நல்லா இருக்கு ...

    ReplyDelete
  6. நண்பர் ஆறுமுகம் முருகேசன்
    வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றியும் அன்பும்

    ReplyDelete
  7. நண்பர் கனவுகளின் காதலன்
    வருகைக்கும் கருத்திற்கும் மிகுந்த நன்றியும் அன்பும்

    ReplyDelete
  8. நண்பர் சந்தான கிருஷ்ணனுக்கு நன்றியும் அன்பும்
    உங்களின் வருகைக்கும் உணர்தலுக்கும்
    (அந்த நதியை தேடியோ அல்லது நதியின் போக்கிலோ ஓடிக்கொண்டிருக்கிறேன் )

    ReplyDelete
  9. நன்றி லாவண்யா உங்களின் வருகைக்கும் பகிர்வுக்கும்

    ReplyDelete
  10. நன்றி அசோக்
    நன்றி கமலேஷ்
    //பொது சொத்துதானே//
    உண்மைதான் நண்பரே உங்களின் வருகைக்கும் புரிதலுக்கும்
    (நீண்ட நாள் ஆயிற்று பதிவு(கவிதை) இட்டு ... ஏன்...கமலேஷ் )

    ReplyDelete