நாம் மழைக்காக காத்திருக்கிறோம்

 
கண்முன்னே திரண்டெழுந்த
கருமேகமொன்று வெள்ளமென
கொட்டிதீர்த்தது
நிதானிக்கவியலா  நொடியில்.
மிதந்தன மூழ்கின : மூழ்கின மிதந்தன
துன்பவியல் தழுவியது நாடகம்
இறுதி காட்சி முடிவற்ற வெறுமை
அடுத்த காட்சி பற்றிய அறிவிப்புகள்
உறுதியாகவில்லை
"நாம் மழைக்காக  காத்திருக்கிறோம்"

13 comments:

  1. கொல்றீங்க அண்ணா....

    ReplyDelete
  2. கவிதை மிகவும் நன்றாக உள்ளது - RAMESH

    ReplyDelete
  3. நண்பரே,

    சிறப்பான வரிகள்.

    ReplyDelete
  4. தேவைக்கதிகமாகக் கிடைத்தாலும் திகட்டும்தாம் எதுவுமே.
    கவிதை சுனாமியைச் சொல்கிறதா!

    ReplyDelete
  5. நன்றி ஜோயல்சன்
    நன்றி ரமேஷ்
    நன்றி கனவுகளின் காதலன்
    நன்றி ஹேமா (மழையை மழைஎனவும் கொள்ளலாம் )

    ReplyDelete
  6. அருமை, வேல் கண்ணா!

    ஒரு தொடர் பதிவு அழைப்பு. நேரம் வாய்க்கிற போது தளம் வாங்களேன்.

    ReplyDelete
  7. சந்தோசம். மழைக்கு நாங்களும் காத்திருக்கிறோம்

    ReplyDelete
  8. நன்றி அண்ணன் பா.ரா விற்கு
    தொடர் பதிவுக்கு முயற்சி செய்கிறேன்

    நன்றி உயிரோடை
    உங்களின் தொடர் வாசிப்பிற்கு நன்றியும் அன்பும்

    ReplyDelete
  9. உங்கள் கவிதை மிக நன்றாக இருக்கிறது வேல்கண்ணன், பல படிமங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
    மெல்ல அல்லது வேகமாகவோ நகராத மத்திம காலத்தின் எழுச்சி, தன் தீவிரத்தை உள்ளடக்கித் தீர்த்தபிறகு, மீண்டும் எழுந்து ஒரு சுழற்வின் முடிவில் எல்லையற்ற சூன்யமும் ஸ்தரமில்லாத எதிர்பார்ப்பும் நிறைந்திருப்பதாக கூறுகிறது. இது என் கருத்துதான். +

    திரண்டெழுந்த கருமேகம் - எழுச்சி,
    கொட்டித்தீர்த்தது - போர், எழுந்தவை தீவிரமாக சண்டையிட்டது, வீழ்ச்சி,
    நிதானமற்ற நொடி - தொடரும் காலம்
    மிதக்க,மூழ்க - சுழற்சி,
    முடிவற்ற வெறுமை- எல்லையில்லா சூன்யம்
    அடுத்த உறுதியற்ற அறிவிப்பு - ஸ்தரமில்லாதது,
    மழைக்குக் காத்திருத்தல் - எதிர்பார்ப்பு

    இன்னும் கொஞ்சம் செம்மைப் படுத்தினால்,

    நிகழ்கால மனத்தினுள் சுழன்றடிக்கும் எண்ணங்கள், முடிவில் உறுதியற்ற நிலையையும், சூன்யத்தையும் கொடுக்கும் என்ற தத்துவமே இக்கவிதை..

    (சரி சரி, ரொம்ப ஓவரா சொன்னா கிறுக்கனா இருப்பானோன்னு நினைச்சிகிடுவீக... கிளம்புதேன்.)

    ReplyDelete
  10. அவரவர் மனப்பாங்குக்கு தங்கள் 'மழை' காட்டும் அர்த்த ஜாலம் அழகு...

    ReplyDelete
  11. நண்பர் ஆதவனின் முதல் வருகைக்கும் முழு புரிதலுக்கும் நன்றியும் அன்பும்
    //தத்துவமே இக்கவிதை// இந்த புரிதல் என்னை வியக்க வைக்கிறது. தொடர்ந்து வருக நண்பரே

    ReplyDelete
  12. நன்றி நிலாமகள் வருகைக்கும் கருத்திற்கும்

    நன்றி நண்பா, ஆறுமுகம் முருகேசனுக்கு.

    ReplyDelete