இறுதி செய்தி


ஒளிந்து கொள்வதற்கு
எப்படித்தான் இவ்வளவு இடம் கிடைக்கிறதோ
இங்கே தானே இருந்தேன் என்கிறாய்.
எங்கே என்பது உனக்கு மட்டுமே தெரிந்த  விந்தை.
போகட்டும்; இறுதியாய் சந்தித்துக்  கொண்டபோது இனம்
அழித்தல் பற்றியும் அழிதல் பற்றியும்  பேசிக்கொண்டோமே...
அது நடந்தேறி விட்டது என்று சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்
நான் இனி திரும்பி வரப்போவதே இல்லை
இனி நீ ஒளியவேண்டிய அவசியமும் இல்லை 


நன்றி : உயிரோசை 

16 comments:

  1. நண்பரே,

    சிறப்பான வரிகள்.

    ReplyDelete
  2. சில நேரங்களில் நாம் எதுவும் சொல்லவேண்டியதில்லாது போகிறது.

    பல நேரங்களில் நாம் இனி ஒரு போதும் சொல்ல விரும்பாததைச் சொல்ல வேண்டியதிருக்கிறது.

    சொல்ல விரும்புகையில் யாருமற்றுப் போய்விடுவதும் நேர்கிறது.

    சோகமான இந்தச் சூழல் இனி வராதிருக்கட்டும் வேல்கண்ணன்.

    ReplyDelete
  3. நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  4. இறுதி செய்தி
    ரத்தச் செய்தியாகிவிட்டதே...?

    ReplyDelete
  5. கண்ணன்...வரமாட்டேன் என்று வாய் சொன்னாலும் மனம் வந்து வந்து உரசிக்கொண்டுதானிருக்கும் !

    ReplyDelete
  6. avashthaiyaan pathivu...

    sonna vitham pidichu irukku...

    ReplyDelete
  7. வாழ்த்துக‌ள் வேல்க‌ண்ண‌ன்

    ReplyDelete
  8. கடைசி இரண்டு வரிகளில் கண்கள் நிலை குத்தி நிற்கிறது வேல்கண்ணன்.

    மிக அமைதியாக சந்தத்துடன் பேசும் இந்த கவிதை தனக்குள்தான் எத்தனை உக்கிரத்தை வைத்திருக்கிறது.

    கடைசி இருவரிகளை மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே இருக்கிறேன்..

    அருமையானதொரு படைப்பு.வேல்கண்ணன்

    ReplyDelete
  9. இயலுமெனில் தங்களின் அழைபேசி எண்ணை இந்த முகவரிக்கு தெரியப் படுத்துங்கள் வேல்கண்ணன்.
    பேசலாம்

    kamalesh.k7@gmail.com

    ReplyDelete
  10. //ஒளிந்து கொள்வதற்கு
    எப்படித்தான் இவ்வளவு இடம் கிடைக்கிறதோ//

    super :-)

    ReplyDelete
  11. கடைசி வரிகளில் கரைந்தேன்/கறைந்தேன் கண்ணன்.
    ஏதோ ஒரு கட்டத்தில் எதுவோ ஒன்று இதை நோக்கி எப்படியோ நம்மை நகர்த்தி விடுகின்றது... இல்லையா?

    ReplyDelete
  12. நண்பர்கள் கனவுகளின் காதலன்
    மிக்க நன்றியும் அன்பும் தொடர் வாசித்தலுக்கும் வாழ்த்திற்கும்

    நன்றி சுந்தர் ஜி
    பின்னூட்டமே கவிதை போல் இருக்கிறது
    உங்களின் தொடர் வாசித்தாலும் வருகையும் கருத்தும்
    பெரும் ஊக்கத்தை தருகிறது.

    நன்றியும் அன்பும் நண்பர் செல்வராஜ் ஜெகதிசனுக்கு

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர் சந்தானகிருஷ்ணணுக்கு

    வருகைக்கு நன்றி நண்பர் அசோக்கு

    தோழி ஹேமா , நீங்கள் சொன்னது மாதிரியே மனம் இன்னும் உரசிக்கொண்டு தான் இருக்கிறது
    நன்றி ஹேமா

    ReplyDelete
  13. வாங்க ஹேமிகிருஷ், நன்றியும் அன்பும்

    வாங்க உயிரோடை நன்றியும் அன்பும்

    வாங்க கமலேஷ் , மிகுந்த நன்றியும் அன்பும். என்னுடைய மடலில் சொல்லியது போல் (கேட்டது போல்)
    'படைப்பு இங்கே என்ன செய்கிறது , வலியை பகிர்கிறேன் - படைக்கிறேன் என்ற போர்வையில் மற்றவரையும் அல்லவா நான் நோகடித்து கொண்டிருக்கிறேன் ..' சரிதானே நண்பரே

    வாங்க உழவன் எனது நன்றியும் அன்பும்

    வாங்க சுகிர்தா , எனது நன்றியும் அன்பும்
    //ஏதோ ஒரு கட்டத்தில் எதுவோ ஒன்று இதை நோக்கி எப்படியோ நம்மை நகர்த்தி விடுகின்றது... இல்லையா//
    ஆமாம் சுகிர்தா .

    ReplyDelete
  14. 2009 ஏப்ர‌ல் 23க்கும், மே 18க்கும் இடையே, எத்த‌ன்க‌ள், எத்த‌னையெத்த‌னை ம‌றைத்த‌ன‌ரோ?

    ReplyDelete
  15. அதை நினைக்கும் போது நெஞ்சம் பதறுகிறது வாசன்,
    (நன்றி உங்களின் வருகைக்கு )

    ReplyDelete