எனது போர்க்களம்




கதைசொல்லி சொன்ன கதைகளின் வழியே 
ஏழு மலை 
ஏழு கடல் 
அடர் காடுகள் கடந்து 
சிகரத்தின் உச்சியில் பிடறி சிலிர்த்தெழுந்த
வெள்ளை புரவியில் அமர்ந்திருந்தேன். 
ராஜகீரிடம் கனத்தது.

பரந்த நிலப்பரப்பை தாண்டி 
எதிரியின் மூவர்ணக்கொடி
உயர பறப்பதை காணமுடிகிறது
இங்கிருந்து 

கடிவாளம் தளர்த்தி முன்னேறும் போது
எதிரியின் கொடி  
தளர்வதையும்  முன்னோக்கி 
வருவதையும் காண்கிறேன் 

எனதான படையுடன் 
களம் அடைந்தேன்
இளைப்பாறிய புழுதியின் பின் 
பெரும்திரளான படையுடன் எதிர்களத்தில்
நிற்கும் எதிராளிகளை உற்று நோக்குகிறேன்.

நூலிழையும் மாறுபாடுகளின்றி நானே அங்கும் 

என்னிலிருந்து வீசும் ஆயுதங்கள் 
என்னையே கொன்று குவிக்கின்றன
எல்லா தேசத்திலும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி :  உமா சக்தி 
மற்றும் அனைத்து நண்பர்களுக்கும் 

16 comments:

  1. எத்தனை வர்ணக் கொடியாயிருந்தாலென்ன. எல்லா இடங்களிலும் ‘என்’தான் இருக்கிறான். அருமை நண்பா. சங்கமம் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
  2. பார்த்துங்க . தடா , பொடா என்று
    சடாரென்று பாய்ந்து விடும் ஆயுதம்

    ReplyDelete
  3. கவிதைகள் அருமை..

    ReplyDelete
  4. நன்றாக இருக்கிறது நண்பரே.

    ReplyDelete
  5. வேல்கண்ணண்

    அருமையான பதிவு

    நாமே நமக்கு எதிரி நாமே நமக்கு வித்தும் வித்தையும்

    ரசித்தேன்

    நன்றி வேல்கண்ணண்
    ஜேகே

    ReplyDelete
  6. கவிதை நன்று. வாழ்த்துகள்

    ReplyDelete
  7. அருமையான கவிதை... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. ம்ம் நிஜம் கண்ணன்... உற்று நோக்கினால் எல்லாம் நான் தான். அருமையான கருத்துக் கவிதை!

    ReplyDelete
  9. இருளில் குழப்பத்தில் தமைத் தாமே வெட்டிச் சாய்க்கும் படைகளாய் நாம் வாழ்வது குறித்து பல வருடங்களுக்கு முன் Matthew Arnold எழுதியது //And we are here as on a darkling plain
    Swept with confused alarms of struggle and flight,
    Where ignorant armies clash by night// இவ்வரிகள். இன்றும் அதே நிலை எனில் வளர்ச்சி என்பது என்ன, எதில், என்று யோசிக்க வைத்தது உங்கள் வரிகள்.இறுதி வரிகள் ஆழமாக இருக்கின்றன.

    ReplyDelete
  10. அருமையான வரிகள்...வாழ்த்துக்கள் வேல்கண்ணன்....

    ReplyDelete
  11. மனிதத்தை முன்னிறுத்தும் தத்துவ ரீதியான ஆழ்ந்த விசாரணைக்குப் பிறகான முடிவுடன் கவிதை அருமை. சென்னை சங்கமம் கவிதை வாசிப்புக்கு வாய்ப்புக்கு வாழ்த்துக்கள் வேல்கண்ணன்.

    ReplyDelete
  12. அருமை.
    பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே என்ற பாரதியை மிஞ்சி விட்டீர்கள் பகைவனும் நானே என்று சொல்வதன் மூலம்.
    எங்கோ உயரத்தில் இருக்கிறீர்கள் வேல்கண்ணன்.
    அண்ணாந்து பார்த்து கைதட்டுகிறேன்.

    ReplyDelete
  13. நன்றி உழவன் (அன்று நீங்கள் இல்லாதது மட்டும் பெரும் குறை எங்களுக்கு )

    நன்றி நண்பர் சாத்ஸ் -
    (அப்படியாக இருப்பின் அப்படியே ஆகட்டும் )

    நன்றி சமுத்திர முதல் வருகைக்கும் பாராட்டிற்கும்

    நன்றி பத்மா

    நன்றி நண்பர் கனவுகளின் காதலன்

    நன்றி நண்பர் ஜே.கே

    நன்றி உயிரோடை

    நன்றி தோழி பிரஷா முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்

    நன்றி சுகிர்தா ..
    உற்று நோக்கியத்தின் புரிதலே இந்த கவிதையும்

    நன்றி மிருணா
    நீங்கள் கேட்ட கேள்விகள் எனக்கு உண்டு மிருணா

    நன்றி ராஜா முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்

    நன்றி கோநா முதல் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்

    நன்றி நண்பர் சிவகுமாரன்
    என் மீது கொண்ட (சற்று மிகையான) அன்பிற்கும் நம்பிக்கைக்கும்
    மிகுந்த நன்றியும் அன்பும்

    ReplyDelete
  14. வாசித்த உடனேயே வசீகரித்துக்கொண்ட எழுத்துக்கள்.....வாசித்து முடித்ததும் ஏதோவொரு உணர்வு!

    ReplyDelete
  15. நன்றி நண்பரே

    ReplyDelete