மலை குன்று மணல் மேடு
பனை தென்னை வாழை மரம்
விளைந்த நிலம் வறண்ட நிலம்
கை அசைத்த கை கொட்டிய குழந்தை
மெலிந்த ஆறு தளர்ந்த நதி
குடிசை ஓட்டு மச்சு வீடு
நின்றவர்களை உள்ளிழுத்தும்
உள்ளவர்களை வெளியே நிறுத்தியும்
செல்கிறது ரயில் வண்டி.

12 comments:

ஹேமா said...

கண்ணன்,வாழ்வும் போல ரெயில் வண்டி போலத்தானே!

கல்யாணி சுரேஷ் said...

ரயிலில் பயணம் செய்யும் அனுபவமும் காட்சிகளும் கண் முன்னே விரிகிறது கண்ணன்.

கனவுகளின் காதலன் said...

இனிமையான பயணம் நண்பரே.

அன்புடன் நான் said...

வண்டி (கவிதை) அழகா ஓடியிருக்கு.

பா.ராஜாராம் said...

புகை வண்டி குறித்து எழுதவென ஒரு நெகிழ்வு வாய்க்கும்.எல்லோருக்கும்...வேல்கண்ணா மட்டும் விதி விலக்கா என்ன?அருமை வேல்கண்ணா!

கண்ணன் said...

சொல்ல வந்ததை புரிந்துகொண்ட தோழி ஹேமாவிற்கு நன்றி
கல்யாணி சுரேஷ்க்கு நன்றி
நண்பர் கனவுகளின் காதலுனுக்கு நன்றி
தோழர் சி. கருணாகரசு -க்கு நன்றி.
பா.ராஜாராம் அவர்களுக்கு நன்றி

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அழகான கவிதை!

-ப்ரியமுடன்
சேரல்

வேல் கண்ணன் said...

சேரல் அவர்களுக்கு நன்றி

உயிரோடை said...

ர‌யில் ப‌ய‌ண‌ம் அருமையான‌தும் கூட‌வே கொஞ்ச‌ம் விச்சிரிமான‌தும். அதையே உங்க‌ள் க‌விதையும் சொல்லி இருக்கின்ற‌து.

வேல் கண்ணன் said...

//ர‌யில் ப‌ய‌ண‌ம் அருமையான‌தும் கூட‌வே கொஞ்ச‌ம் விச்சிரிமான‌தும். //
உண்மை தான் உயிரோடை எழுதி தீரவில்லை தான்.
நன்றி

மிருணா said...

சதுரம் சதுரமாய் நாம் கடக்கும் காட்சிகளை வேகமாகப் படம்பிடிக்கின்ற வரிகள். வீட்டிற்குப் பின்னால் railway line இருந்ததால் சிறு வயதில் மனம் படபடக்க பக்கத்தில் இருப்பவர்களின் கைகளை இறுகப் பிடித்த நினைவையும் கொண்டு வந்தது. அருமை.

rvelkannan said...

நன்றி சைக்கிள் உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும்...
//பக்கத்தில் இருப்பவர்களின் கைகளை இறுகப் பிடித்த நினைவையும் கொண்டு வந்தது. அருமை//
அருமையான தருணம் எந்த வித இடர்களும் இல்லாமல் இருந்த அந்த பொழுது மறுபடியும் வருமா ... தோழி .. ?