மச்ச பலன்


மச்சத்தின் இருத்தலில்
சொல்லிவிட முடியும்
பெண்ணின் குணங்களை
என்றவனை
வாய்பிளந்து பார்த்தாள்
யோனி தைக்கப்பட்ட
ஆப்பிரிக்க பெண்ணொருத்தி.

11.01.10 உயிரோசை இணைய இதழில் வெளியான கவிதை
நன்றி : உயிரோசை

10 comments:

கமலேஷ் said...

அழுத்தமான எழுத்து....ஆழமான சிந்தனை....பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

ஆழமான வரிகள் கொண்டு தைத்திருக்கிறீர்கள்....

ஹேமா said...

ஆழமான கற்பனை !

பலா பட்டறை said...

கடைசி இரண்டு வரிகள்.. நிறைய வலிகள் சொல்லுது நண்பரே..:(

தேவன் மாயம் said...

பொங்கல் வாழ்த்துக்கள்!!

velkannan said...

வாங்க கமலேஷ் மிக்க நன்றி
********
மிக்க நன்றி நண்பர் கனவுகளின் காதலனுக்கு.
**********
வாங்க ஹேமா மிக்க நன்றி.
***********
மிக்க நன்றி பலா பட்டறை நண்பர்க்கு.
********
தேவன் மாயத்திற்க்கும் மற்றும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்
**********
இந்த கவிதை பற்றி :

ஆப்பிரிக்க பழங்குடியினர்களின் சடங்கு இது. அந்த சடங்கினை எதிர்த்த ஒரு சாதாரண கிராமத்து
பெண்ணின் கதை தான் 'moolaade' என்ற திரைப்படம்.
இயக்குனர் : ousmane sembene .
இத்திரைப்படத்தை ஆனந்த விகடனில் உலக சினிமா வரிசையில் செழியன் எழுதியிருந்தார். சமிபத்தில் தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன்.
(இந்த வரிசையை நான் பட்டியல் போட்டு பார்த்து வருகிறேன்.)
குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்ணுக்கு இருக்கும் மச்சங்களை கொண்டு அவர்களை எடை போட்டு விட முடியும் என்று சொல்லும் ஒரு கூட்டம் இருக்கிறது. இது தவறான புரிதலுக்கு எடுத்து செல்லும்.

அந்த பதிவில் செழியன் எழுதிய கடைசி பத்தி குறிப்பிட்டு சொல்லகூடிய ஒன்று.
நன்றி : செழியன் அவர்களுக்கு

(இந்த கவிதை பற்றி என்னை அலைபேசியிலும் e-mail மூலமாகவும் சந்தேகம் கேட்ட, பாராட்டிய அனைத்து நண்பர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எனது நன்றியும் அன்பும். மீண்டும் ஒருமுறை
'உயிரோசைக்கும்' எனது நன்றி )

thenammailakshmanan said...

உண்மை வேல்கண்ணன்
நல்ல கவிதை வலியுடன்

velkannan said...

தேனுவிற்கு நன்றியும் அன்பும்

இன்றைய கவிதை said...

அழகான வரிகள் -- நன்றி வேல்கண்ணண்..

ஜேகே

velkannan said...

நன்றி ஜேகே .