என் காதல் கவிதையும் நீயும்..

(வார்ப்பு இணைய இதழில் 'என் காதல் கவிதையும் நீயும்...' என்ற தலைப்பில்
 வந்த எனது கவிதை. தலைப்பு வார்ப்பு குழுமத்தை சார்ந்தது.)

தினம் கவிதை கேட்கிறது
உன் இதழ்
உடனே தந்தும் விடுகின்றன
உன் கண்கள்
எழுதத்தான் மனமில்லை
வெற்று மைக்கொண்டு
உன் மென்மையை
கரைத்து தா !
சேமித்து கொள்கிறேன்
கவிதையின் வழியாக
உன்னை.

நன்றி : வார்ப்பு

18 comments:

புலவன் புலிகேசி said...

நன்று வேல்...அருமை...

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு வேல்கண்ணா.

சி. கருணாகரசு said...

தலைப்புத்தான் கவிதையை எனக்கு உணர்த்தியது. நல்லாயிருக்குத் தோழர்.

சத்ரியன் said...

////....
உன் மென்மையை
கரைத்து தா !
சேமித்து கொள்கிறேன்
கவிதையின் வழியாக
உன்னை. //

வேல்கண்ணன்,

"வேல் கண்கள்" படுத்தும் பாடு...ம்ம்ம்ம்!

கனவுகளின் காதலன் said...

அருமையாக இருக்கிறது நண்பரே.

கல்யாணி சுரேஷ் said...

//உன் மென்மையை
கரைத்து தா !
சேமித்து கொள்கிறேன்
கவிதையின் வழியாக
உன்னை. //

அட்டகாசம் கண்ணன்.

முகமூடியணிந்த பேனா!! said...

அழகு !

இன்றைய கவிதை said...

நல்லா இருக்கு வேல்கண்ணன்

நன்றி ஜேகே

வேல் கண்ணன் said...

புலவன் புலிகேசி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
*************
பா.ரா அவர்களுக்கு நன்றி
********************
தோழர் கருணாகரசுக்கு நன்றி
*********************
நன்றி சத்ரியா ,
***********************
நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி
****************
தோழி கல்யாணி சுரேஷ்க்கு நன்றி
*********************
வாங்க தோழர் தாமோதரன், நன்றி
நலமா பதிவும் எதுவும் இல்லையே
என்னவாயிற்று ...?
***********************
'இன்றைய கவிதை' ஜேகே - க்கு நன்றி
மற்ற நண்பர்களும் நலமா

ஹேமா said...

பேனா மை கரைத்து காதலின் ஆழத்தைச் சேமித்துக்கொண்ட்டீர்கள் கண்ணன்.

Tamilparks said...

மிகவும் அருமையான கவிதைகள், வாழ்த்துக்கள் தொடர்ந்து பல விருதுகள் பெற தமிழ்த்தோட்டம் வாழ்த்துகிறது

rameshskr said...

very nice sir

வேல் கண்ணன் said...

நன்றி ஹேமா
//பேனா மை கரைத்து காதலின் ஆழத்தைச் சேமித்துக்கொண்ட்டீர்கள் கண்ணன்//
சேமிக்க முயன்று உள்ளேன் ஹேமா
***************************************
தமிழ்த் தோட்டத்திற்கு நன்றி
உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்.
***********************
ரமேஷ் -க்கு நன்றி
நலமா?

அகநாழிகை said...

கவிதை அருமை, வேல்கண்ணன்.

- பொன்.வாசுதேவன்

வேல் கண்ணன் said...

வாங்க, வாசு நன்றி

செல்வராஜ் ஜெகதீசன் said...

Nice poem.

கிருஷ்ண பிரபு said...

நண்பரே! தொடர் பதிவிற்கு உங்களை அழைத்திருக்கிறேன்... விருப்பம் இருப்பின் தொடருங்கள்.... நன்றி...

அன்புடன்,
கிருஷ்ண பிரபு.

வேல் கண்ணன் said...

செல்வராசு ஜெகதிசன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றியும் அன்பும்.
*****************
வாங்க. நண்பர் கிருஷ்ணா , நன்றி
//விருப்பம் இருப்பின் தொடருங்கள்//
உங்களின் அன்பிற்கு முன்னால் எல்லாமே விருப்பம் தான் நண்பரே.