நண்பர் கிருஷ்ண பிரபு அழைப்பு : தொடர் பதிவு

நண்பர் கிருஷ்ண பிரபு அழைப்பு : தொடர் பதிவு

இந்தத் தொடர் பதிவுக்கான விதிகளாகக் கொடுக்கப்பட்டிருப்பவை

1. பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் தமிழ்நாட்டிற்குள்ள இருக்கணும். (நீங்க எழுதறப்பவோ நாங்க அதைப் படிக்கறப்பவோ அவரு ஷீட்டிங்குக்கோ, மீட்டிங்குக்கோ வெளிநாடு போயிருக்கலாம்.. தப்பில்ல!)

2. நீங்க இதை எழுத அழைக்கிற பதிவர் குறைந்தது இருவராகவும், அதிகபட்சம் ஐவராகவும் இருக்கலாம்.

3. பிடித்தவரோ, பிடிக்காதவரோ கண்டிப்பாய் பிரபலமானவராய் இருக்க வேண்டும். அவங்களை உங்களுக்கு இப்பத்தான் பிடிக்கல, பின்னாடி பிடிக்கலாம்ங்கற சமயத்தில தற்போது-ன்னு சேர்த்திக்கலாம்.

4. கேள்விகள் குறைந்தது ஏழு இருக்கணும். ஆனா பத்தைத் தாண்ட வேண்டாம்.

இனி :
01.
பிடித்த தலைவர் :
தந்தை பெரியார், காமராஜ் , கக்கன்
பிடிக்காதவர்கள் :
ஜெயலலிதா, கருணாநிதி , ராமதாசு,விஜயகாந்த்.
மற்றும் காங்கிரசு தலைவர்களும்

02.
பிடித்த அதிகாரி :
இறையன்பு.
பிடிக்காத அதிகாரி :
அலுவகத்தில் குறட்டை விடுபவர்கள்

03.
பிடித்த நடிகர் :
M.R. ராதா, நாசர், ரகுவரன், பசுபதி.
பிடிக்காத நடிகர் :
'எனக்கு பின்னாடி தமிழ் நாடே இருக்கு' என்று வசனம் பேசுபவர்கள்.
'நான் சொன்ன அவங்க உயிரையும் கொடுப்பாங்க' (போங்கடா .',,,,,,,,,,,,,')

04.
பிடித்த நடிகை :
தேவிகா, ஷோபா
பிடிக்காத நடிகை :
குஷ்பு , சிம்ரன்.

05.
பிடித்த திரைப்பட பாடலாசிரியர் :
பட்டுகோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், அறிவுமதி
பிடிக்காத திரைப்பட பாடலாசிரியர் :
பேரரசு

06.
பிடித்த இயக்குனர்கள் :
மகேந்திரன், பாலு மகேந்திரா, சேரன்,பாலா
நம்பிக்கை தருபவர்கள் :
அமீர், சசி(பூ) , சசிக்குமார், மிஷ்கின், வசந்த பாலன்,பாண்டிராஜ்
பாலாஜி சக்திவேல் , சிம்புதேவன் மற்றும் இன்னும் பலர்.
பிடிக்காத இயக்குனர்கள் :
பாலசந்தர், விக்ரமன், பேரரசு

07
பிடித்த ஓவியர் :
ஆதிமூலம், மருது
பிடிக்காத ஓவியர் :
ஜெயராஜ்

08.
பிடித்த திரைப்பட பாடகர் :

ஆண் : P.B. ஸ்ரீநிவாஸ், ஜெயச்சந்திரன்,K.J. ஜேசுதாஸ்
பெண் : P. சுசிலா, சித்ரா, ஜென்சி, ஜானகி

பிடிக்காத திரைப்பட பாடகர் :

ஆண் : உதித் நாராயண்
பெண் : L.R. ஈஸ்வரி , அனுராதா ஸ்ரீராம்.

நான் அழைக்கும் பதிவர்கள் :

அன்புடன் நான் : சி. கருணாகரசு
மனவிழி : சத்ரியன்.

7 comments:

butterfly Surya said...

உங்களுடைய பல பிடிக்காதவர்கள் லிஸ்ட் எனக்கும் பொருந்துகிறது.

பகிர்விற்கு நன்றி.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

ஷோபாவை எனக்கும் பிடிக்கும், அவரின் புன்னகையை என்னால் மறக்க முடியாது. அழியாத கோலங்கள் டீச்சரை மறக்க முடியுமா என்ன.

வேல் கண்ணன் said...

வாங்க சூர்யா, உங்களின் வருகையும் கருத்தும் எனக்கு ஊக்கம் அளிக்கிறது.
*******************************
நண்பர் கனவுகளின் காதலனுக்கு , மிக்க நன்றி நண்பரே உங்களின் கருத்துக்கு, ஷோபா வை பற்றி தனி பதிவு ஒன்றே போடலாம். மாதவராஜ் தீராத பக்கங்களில் 300 வது பதிவாக ஷோபா பற்றி எழுதியுள்ளார். எனக்கு பிடித்த அந்த பதிவு
இதோ :
http://mathavaraj.blogspot.com/2009/08/300.html

கல்யாணி சுரேஷ் said...

//பிடிக்காத நடிகர் :
'எனக்கு பின்னாடி தமிழ் நாடே இருக்கு' என்று வசனம் பேசுபவர்கள்.
'நான் சொன்ன அவங்க உயிரையும் கொடுப்பாங்க' (போங்கடா .',,,,,,,,,,,,,')//

எனக்கும் இவங்களை பிடிக்காது.

//பிடித்த திரைப்பட பாடகர் :

ஆண் : P.B. ஸ்ரீநிவாஸ், ஜெயச்சந்திரன்,K.J. ஜேசுதாஸ்
பெண் : P. சுசிலா, சித்ரா, ஜென்சி, ஜானகி //

எனக்கு இவங்களோடு S.P.பாலசுப்ரமணியம் அவர்களையும் பிடிக்கும். அதோடு விஜய் டிவி super singer junior நிகழ்ச்சியில பாடற குட்டி தேவதைகளையும், தேவன்களையும் ரொம்ப பிடிக்கும்.

velkannan said...

கல்யாணி சுரேஷ்க்கு - நன்றி
//விஜய் டிவி super singer junior நிகழ்ச்சியில பாடற குட்டி தேவதைகளையும், தேவன்களையும் ரொம்ப பிடிக்கும்.//
நானும் கேள்விப்பட்டேன். நன்றாக வளர்ந்து வரட்டும். வாழ்த்துகள்.

இன்றைய கவிதை said...

எல்லாம் இயல்பாக இருந்தன!
நம்பும்படியும்!

-இன்றைய கவிதை நண்பர்கள்

velkannan said...

இன்றைய கவிதை நண்பருக்கு நன்றி