மரங்களடர்ந்த சாலையின் காலைமரங்களடர்ந்த சாலையின் காலை
என்னுடன்
பழகிய நடையில் முதியவர்
நடை பழகும் இன்னொருவர்.


இளைப்பாறுவதற்கு
அவரவரருக்கேன்று ஒரு மரம் பிடித்தோம்
நடை பழகியவருக்கு மூச்சிரைத்தது
நாட்களில் பழகிப்போனது.
பிறகு
இன்னும் சிலர் சேர்ந்து கொண்டார்கள்
பிறகு..
இன்னும் சிலர்... இன்னும் சிலர்...


அவரவருக்கென்று
மரங்கள் கிடைப்பதில்லை
சில நாட்களாக
முதியவரை காணவில்லை

மரங்கள்
பூச்சொறிவதற்கும் இலையுதிர்ப்பதற்கும்
மறக்கவில்லை.


தமிழ்த்தோட்டத்தில் வெளியான எனது கவிதை
நன்றி : தமிழ்த்தோட்டம்

15 comments:

butterfly Surya said...

அருமை நண்பா.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமையாக இருக்கிறது. உதிர்ந்து மிதிபடும் இலைகளிற்கு சில வேளைகளில் முதியவர் பற்றி தெரிந்திருக்கக் கூடும்.

மண்குதிரை said...

வாவ் ரொம்ப நல்லா இருக்கு

இன்றைய கவிதை said...

அருமை நண்பா

ஜேகே

வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்........ said...

////////// மரங்கள்
பூச்சொறிவதற்கும் இலையுதிர்ப்பதற்கும்
மறக்கவில்லை ///////////

எதார்த்தமான வரிகள் . அற்புதமான படைப்பு வாழ்த்துக்கள் .

2010 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .!!!!!!!!!!

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள படம் சிறப்பாக உள்ளது.

kamalesh said...

மிகவும் முதிர்ச்சியான கவிதை... அழகாய் இருக்கிறது....
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

பலா பட்டறை said...

நல்ல படம் நல்ல வரிகள்...:))

thenammailakshmanan said...

பழுத்த இலைகளும் மரங்களும் கூட காலப் போக்கில் மறைந்து விடுகின்றன வேல் கண்ணன் .. அருமையா எழுதி இருகீங்க ..முதுமையின் முடிவு அதுதான் ..

புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

உயிரோடை said...

த‌மிழ் தோட்ட‌ம் இத‌ழில் வ‌ந்த‌மைக்கு வாழ்த்துக‌ள்.

க‌விதையும் அருமை.

கல்யாணி சுரேஷ் said...

அருமையான கவிதை கண்ணன்.

இன்றைய கவிதை said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

velkannan said...

நட்புடன்
சூர்யா,
கனவுகளின் காதலன் ,
இன்றைய கவிதை நண்பர்கள் ஜே கே, சந்தர், ப்ரபா, கேயார்,
வாசகனாய் ஒரு கவிஞன் சங்கர்(வாங்க, வாங்க )
கமலேஷ் ,
பலா பட்டறை,
தேனு ,
உயிரோடை லாவண்யா ,
கல்யாணி
உங்கள் அனைவர்க்கும் எனது நன்றியும் அன்பும்
மற்றும்
பதிவர்கள் அனனவருக்கும்
எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஹேமா said...

கண்ணன் வாழ்வின் யதார்த்தமே இதுதானே.துளிர்வும் உதிர்வும்.

velkannan said...

நன்றி ஹேமா