கொடூர விலங்கொன்றின் சாயை


கொடூர விலங்கொன்றை வளர்த்து வருவதாக சொன்னார்கள்
கொடியது ஆயினும் சைவ உண்ணி தான்,
வற்றினாலும் புசிக்கது அசைவத்தை எனவும் சொன்னார்கள்

விரல் நீள மெமரி கார்டில பதிவு செய்தவன் கேட்டான்
வளர்ப்பது ஏன் ? வெளியேற்றப்படும் நாள் எது ?
வெள்ளை நிற சட்டை அணித்தவர் பதில் சொன்னார்:
சூழல் கனிந்து வரும் காரணம் அன்று தெரியும்

மறுநாளில் தலை முதல் வால் வரை செய்தியானது

உலக அரங்கில் ஆலோசித்தனர்
விண்வெளி கண்கள் இருப்பிடம் தேடிமொய்த்தன.
தீனி செலவு கணக்கிடப்பட்டது ரகசியமாக
உள்துறை ஆட்கள் வேவு பார்த்தார்கள்

சந்தையில் விலங்கின் கற்பனை ஓவியமும்
கட்டுடைத்த கதைகளும் விற்று தீர்த்தது.
கேலிச்சித்திரம் ஒன்று எழுதி எழுதி அழிக்கப்பட்டது.

பிறிதொரு நாளில்
பெருந்தலைவனின் தலைமறைவு குறித்தும்
நடிகைகளுடன் தொடர்பு குறித்தும் செய்தியானது.

ஆனாலும்
குழந்தைகள் விளையாடும் தோட்டத்திலும்
கனவிலும்
கொடிய விலங்கு ராட்சத பேருருவமாய்
உலவிவருகிறது இன்னமும்.

நன்றி : வார்ப்பு
          ~ ~ ~

11 comments:

King Viswa said...

அருமை.

சி. கருணாகரசு said...

தோழரே...
அது சைவ உண்ணியா? .... அல்லது சதை உண்ணியா?

//உலவிவருகிறது இன்னமும். //

உலவி வருகிறதா? அல்லது உலவ விடுகிறோமா?

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கனவிலும், தோட்டத்திலும் இருந்து அது விலகவே விலகாதா ?

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

ஜெகதீஸ்வரன். said...

புதுசா இருக்கு!

ஜெனோவா said...

ஆம் ..
நன்றாக இருந்தது நண்பரே !

ஹேமா said...

கண்ணன் அரசியலா ?ஆனால் அந்த மிருகத்தை அழிக்க யாரோ ஒருவர் தேவைதானே !

கமலேஷ் said...

எவ்வளவு அழகாக கவிதையாக்கி இருகிறீர்கள்...உங்களின் "துளியின் வலி"..மிக மிக அருமையான படைப்பு...வாழ்த்துக்கள்..தொடருங்கள்...

உயிரோடை said...

வேல்க‌ண்ண‌ன் க‌விதை ந‌ல்லா இருக்கு.

TamilBlogger said...

இது எப்படி இருக்கு !

www.tamilblogger.com

velkannan said...

நன்றி கிங் விஷ்வா ..
*********
சபாஷ் தோழரே ...
கவிதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றதற்கு..
**********
அப்படித்தான் நினைக்கிறேன் நண்பர் கனவுகளின் காதலனே..
வருத்ததுடன்....
********
தலைவன் குழுமத்திற்கு நன்றியும் அன்பும்
*********
ஜெகதிஷ்வரன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
**********
ஜெனோவா, எனது நன்றியும் அன்பும் நிறையவே ...
********
ஆம் தோழி ஹேமா, அரசியலே தான் ஆனால் 'கண்ணன் அரசியல்' அல்ல. அரசியல் மட்டுமே.
//யாரோ ஒருவர் தேவைதானே!//
கண்டிப்பாக தேவைதான், அவனும்/அவளும்/அவர்களும் இருக்கிறான்/ள்/ர்கள் என்று நம்புகிறேன்.
***********
நன்றி கமலேஷ் எனது அன்பும் நன்றியும் நிறையவே ...
***********
நன்றி உயிரோடை
************
நன்றி Tamilblogger
நல்லாவே இருக்கட்டும்
******