காணவில்லை : நீயும் நானும்


நம்மிடையே நிகழ்ந்த நிகழ்வொன்றில் 
ஐந்து தலை நாகமொன்று 
நிரம்பிக்கொண்டது இடை....வெளியை. 

உன்னுடையது என்று நானும் 
என்னுடையது என்று நீயும் 
தனித்தனியே விலகிக்கொண்டோம் 

நான் விட்டு சென்ற ஆளுமையையும் 
நீ தெளித்து சென்ற அலட்சியத்தையும் 
விழுங்கி செழித்தது 
மாறிமாறி பழிச்சொன்ன சொற்கள் 
உற்சாககபானமானது 

ஒரு பின்மாலையில் 
நகர பற்களிலிருந்து பிதுங்கி ஒரு சேர 
வந்தபோது அறையில் நிரம்பி தளும்பிய 
ஆலகால விஷத்தில் மூழ்கிபோனோம். 

சில நாட்களாகவே 
நாமிருவரையும் காணவில்லை நன்றி : வார்ப்பு 

21 comments:

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மிகவும் அருமை.

செல்வராஜ் ஜெகதீசன் said...

அருமை Kannan.

உயிரோடை said...

ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து

இன்றைய கவிதை said...

வேல்கண்ணண்,

அருமை , சில காலமாக இங்கு பல இருவர்களை காணவில்லை , எல்லார் சார்பாகவும் எழுதினீர்களோ

ரசித்தேன்

நன்றி ஜேகே

Jenova said...

கண்ணன், நேற்றே படித்து உணர்ந்த கவிதை ...
ஈருடல் ஓருயிர் என்பதெல்லாம் நம் அப்பா , தாத்தா காலத்தோடு வழக்கொழிந்துதான் போய்விட்டது போலும் !

ரொம்ப நாட்களுக்கு அப்புறம் சில நாட்களாகத்தான் இணைய பக்கங்களில் உலவுகிறேன் .. சற்றைக்கெல்லாம் விட்டதையெல்லாம் படிக்கவேணும் ...

வாழ்த்துக்கள் நண்பா !

கமலேஷ் said...

மிகவும் அருமை நண்பரே

sugirtha said...

ரொம்ப நல்லா இருக்குங்க கண்ணன். இந்த வரிகள் அருமை.
//சில நாட்களாகவே
நாமிருவரையும் காணவில்லை//

"உழவன்" "Uzhavan" said...

// ஒரு பின்மாலையில்
நகர பற்களிலிருந்து பிதுங்கி ஒரு சேர
வந்தபோது அறையில் நிரம்பி தளும்பிய
ஆலகால விஷத்தில் மூழ்கிபோனோம்.//

நல்ல வரிகள்

santhanakrishnan said...

ஆலகால விஷத்தில் மூழ்கிப் போனோம்.

யோசிக்க வைத்த வரி.
பாராட்டுக்கள்.

கல்யாணி சுரேஷ் said...

ரொம்ப நல்லா இருக்கு கண்ணன்.

kannan said...

நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றியும் அன்பும்

செல்வராஜ் ஜெகதிசனுக்கு நன்றியும் அன்பும்

kannan said...

நன்றி லாவண்யா,

நன்றி ஜே.கே (நலமா ...)

kannan said...

வாங்க ஜெனோ
//ஈருடல் ஓருயிர் என்பதெல்லாம் நம் அப்பா , தாத்தா காலத்தோடு வழக்கொழிந்துதான் போய்விட்டது போலும் !//
அப்படியான வருத்தத்துடன் பதிவு செய்தேன் , வருகைக்கும் கருத்திற்கும் நன்றியும் அன்பும்

கமலேஷ்க்கு நன்றியும் அன்பும்

kannan said...

வாங்க சுகிர்தா எனது நன்றியும் அன்பும்

நண்பர் உழவனுக்கு நன்றியும் அன்பும்

kannan said...

நண்பர் சந்தனகிருஷ்ணனுக்கு நன்றியும் அன்பும்

தோழி கல்யாணிக்கு நன்றியும் அன்பும்
(அண்ணன் நேர்மறை அந்தோணிமுத்து இறப்புக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் )

அஹமது இர்ஷாத் said...

நல்லாயிருக்கு வரிகள்..

Vel Kannan said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அஹமத் இர்ஷத்

சுந்தர்ஜி. said...

உறவுகளின் இடைவெளியில் சர்ப்பங்களும் காட்டு மிருகங்களும் உலவ இடம் கொடுத்து மனித நாகரீகத்தைக் காட்டுக்கு அனுப்பிவிட்டோம்.பொட்டில் அறைகிறது கவிதை.சபாஷ் வேல்கண்ணன்.

அஹமது இர்ஷாத் said...

வரிகள் நல்லாயிருக்கு நண்பா..

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு வேல்கண்ணா.

Vel Kannan said...

நன்றி ஜி , உங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் ...

நன்றி அஹமத் இர்ஷாத்

வாங்க அண்ணே, வாங்க ரொம்ப நன்றி அண்ணே