இன்னும் செல்ல வேண்டும்


 
 
இந்த ஐம்பது நிமிட பயணத்தில்
ஒருமுறை தான் கிடைத்தது
உன் பார்வை எனக்கு.

நான் சேகரித்திருக்கும்
பெருமழைநாளில் கிடைத்த
உன்னுடைய வெப்பம்
நாற்ற பிசுபிசுப்பில் குளுமை
பிணைத்து கொண்ட இளஞ்சூடு
களைத்து சாயும் போதெல்லாம்
வாஞ்சையுடன் வருடிக்கொடுத்த
விரல்களின் மெல்லிசை நடனம்
மின்சாரமற்ற இரவொன்றில்
கட்டுகடங்காமல்   பொழிந்த முகவெண்ஒளி
(அன்றே சொன்ன போதும் நம்பவில்லை நீ)
மெத்தென குழைந்த முலைநிமிர்வு 
ஈர்ப்பின் தாய்மை   
ஆலமர ஊஞ்சலில் ஆடிய பருவங்களை
மீட்டுதந்த உன் படர்ந்த மடி
இதழ் மடிப்புகளில் ஒளிந்திருக்கும்
எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள்
ஆக அனைத்தையும் ஒப்படைத்து விடுகிறேன்

மீண்டும்
பார்வை கொடு  
இன்னும்  செல்ல வேண்டும்

 

மே -2011 உயிர் எழுத்து இதழில் வெளியான எனது கவிதை
நன்றி : உயிர் எழுத்து

18 comments:

ஆறுமுகம் முருகேசன் said...

நல்லா இருக்கு நண்பா..

! ♥ பனித்துளி சங்கர் ♥ ! said...

அருமையான ரசனைப் பயணம் கவிதையில்

meenu-asha said...

nice

நிரூபன் said...

அன்னையை, தன் உற்றவளிடம் கண்டு கவிஞரின் வித்தியாசமான மொழி நடை கவிதைக்குப் பலமாக இருக்கிறது.
ஆங்காங்கே குறியீட்டு வர்ணனைகளோடு கவிதை நகர்ந்து செல்கிறது.


இன்னும் செல்ல வேண்டும்//

காலம் கடந்து சென்ற நிகழ்வுகளை நிகழ்காலத்தில் தன் துணையூடாகத் தரிசிக்க நினைக்கும் கவிஞனின் எண்ண அலைகளாக இங்கே படர்ந்திருக்கிறது.

கனவுகளின் காதலன் said...

அருமையான வரிகள் அன்பு நண்பரே.

சுந்தர்ஜி said...
This comment has been removed by the author.
சுந்தர்ஜி said...

கன்னியின் கடைக்கண் பார்வை குறித்த பாரதிதாசனின் கடுகுக் கவிதையை நினைவூட்டியது.

மெத்தெனக் குழைந்த முலைநிமிர்வு-இந்த வரிகளின் வசீகரமும் அழகு வேல்கண்ணன்.

திருநாவுக்கரசு பழனிசாமி said...

பயணங்கள் முடிவிலா வசீகரத்தை தந்து கொண்டேயிருக்கின்றன

"உழவன்" "Uzhavan" said...

யேயப்பா.. ஒரு பார்வை எதையெதையெல்லாம் தந்திருக்கிறது.. வாழ்த்துகள் நண்பா

sakthi said...

கன்னியரின் கடைக்கண் பார்வைக்கு இவ்வளவு மதிப்பா????

vasan said...

ஐம்ப‌து நிமிட‌ நீண்ட‌ ப‌ய‌ண‌த்தில்
கிட்டிய‌ முத‌ல் பார்வைக்கே,

/'மெத்தென குழைந்த முலைநிமிர்வு
ஈர்ப்பின் தாய்மை
ஆலமர ஊஞ்சலில் ஆடிய பருவங்களை
மீட்டுதந்த உன் படர்ந்த மடி
இதழ் மடிப்புகளில் ஒளிந்திருக்கும்'/

ர‌க‌சிய‌ம் வ‌ரை துழாவும் உங்க‌ளை
ம‌றுபார்வை பார்த்தால் இன்னும்
என்னென்ன‌ (சொல்)செய்வீரோ?
எங்கெங்கு செல்வீரோ?

சற்றே ச‌ரிந்த‌...பார்வையோ?
வேல்....க‌ண்ணா!! அருமை.

பத்மா said...

arumai ..arumai vaazhthukkal

முரளிகுமார் பத்மநாபன் said...

பாஸ் இப்படி ஆளாளுக்கு கிறுக்குனா எப்படி? :-) கலக்கல்ஸ்..... வாழ்த்துகள்.

santhanakrishnan said...

ஆம்.எங்கேயும் தங்கி விடமுடியாதுதான்.

SANTHA said...

என் பால்ய கால நினைவுகளை கண் முன் நிறுத்திவிட்டாய் கண்ணா! வாழ்த்துகள்

Com Nandhu said...

கடந்துபோன காலத்தை மீண்டும் நினைவூட்டுகிறது. வியர்வைக் குளியலுக்கு ஊடே மெல்லியப் பூங்காற்று.

Vel Kannan said...

நண்பர் ஆறுமுகம் முருகேசன்
நண்பர் பனித்துளி சங்கர்
நண்பர் மீனு- ஆஷா
நண்பர் நிரூபன்
நண்பர் கனவுகளின் காதலன்
மதிப்பிற்குரிய சுந்தர் ஜி
நண்பர் திருநாவுகரசு பழனிசாமி
நண்பர் உழவன்
நண்பர் சக்தி
நண்பர் வாசன்
நண்பர் பத்மா
நண்பர் முரளிகுமார்
நண்பர் சந்தனக்ரிஷ்ணன்
நண்பர் A K T
நண்பர் நந்து
ஆகிய அனைவருக்கும் நன்றியும் அன்பும்

உயிரோடை said...

வாழ்த்துகள் வேல்கண்ணன்