எரி


சொல்லின் வெற்றிடவெளிக்குள்
வலை வீசினேன்   
உடனிருந்து இறந்தவனின்
வலது கடைவாய்ப் பற்கள் 
முன்னோர்களின் எலும்புகள் 
மற்றும் 
கூரிய வாள் சிக்கின.

இரவல் வார்த்தை அமிலத்தில் 
தோய்த்திருந்த வாளினை  
மிகு ஆர்வமுடன் கையில் வாங்கி பார்த்த நீ 
மறுகணமே எனது நெஞ்சினில் ஏற்றினாய். 

துடிதுடித்து இறந்தவனைப் புதைத்து விட்டு 
இப்பொழுது தோண்டி எடுத்து ஆராய்ந்து பார்க்கிறாய்
இறுதியாக விடுபட துடித்த சொற்களுக்குள் 
ஏதேனும் இறைஞ்சுதல் இருக்குமாயென  
இதனினும் பெரியதோர் 
சாபத்தைப்  பெற மாட்டேன் 

தோற்ற உன்னைக் கேட்டுக்கொள்கிறேன் 
"மறுமுறை புதைக்காதே , எரி"

 
நன்றி : உயிர் எழுத்து, பிப்ரவரி , 2013

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_28.html) சென்று பார்க்கவும்... நன்றி...

அப்பாதுரை said...

எரிப்பதற்கு இப்படி ஒரு ஆழமான பொருள் இருக்குமென எதிர்பார்க்கவில்லை.