நிலை வந்து சேராத தேர்


பளுவேறிய வண்டியை இழுகின்றேன்.
சேருமிடம் சேர்ப்பிக்க
பெறப்போகும் கூலி
கால்கட்டை அவிழ்க்கிறது.
கரடுமுரடுற்ற அந்த நீண்ட சாலையில்
கனவுகள் மலிந்து கிடந்தன.
இசை சல்லிசாக கிடைத்து.
குறுக்கும் நெடுக்குமாய் குழந்தைகள் பொங்கினார்கள்.
திரும்பும் போது இளைப்பாறி
இசைக் கனவுகளை ஏற்றி செல்லவேண்டும்
முடிந்தால் குழந்தைமைகளையும்.
எதிர் திசையிலிருந்து ஒருவன்
என்னைப் போலவே
வண்டியை இழுத்து வருகிறான்.
சில தூரங்களுக்கு பின்
அவனை மீண்டும்
நேர் கொண்ட கணத்தில்
பளுவுணர்கிறேன் மேலும்..
நன்றி : யாவரும்.காம்
ஓவியம் : David Choe (இணையத்திலிருந்து)

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

இளைப்பாறினால் யாவும் நலம்...