மரண சாயல்

அப்பாவின் சாயல் எனக்கு. சப்பட்டையான பாதம், முதுகு, கழுத்து மடிப்பு, இரட்டை நாடி, பெரிய நெற்றியென ஒரே மாதிரியாக இருப்பதாக சொல்லுவாள் அம்மா. அப்பா இறந்த பின் கழிந்த நாட்களில் அவரைப் போலவே ஒருக்களித்து உறங்க முயற்சித்து ஐந்து வருடங்கள் முன்பு இறந்த மகனை போல குப்புறபடுத்தே உறங்குகின்றேன்.