புரிதல்

இறந்த தந்தையின்
நண்பர் மரணம்
அழுகுரலிடையே
அம்மாவை பற்றி
கேட்டாள் இறந்தவரின்
மனைவி
ஓடிப்போன அக்காவிடமிருந்து
தகவல் உண்டா ?
மூத்தமகள்
குடிப்பழக்கத்திற்கு
அடிமையாகிப்போன
அண்ணாவை பற்றி
மகன்
இறந்தவரின் இல்லாமையை
உறுதிபடுத்திய கேள்விகள்
"ம் " - என்றேன்
மாலை வாங்கிய
மீதிச்சில்லரையின்
இடையே
ஒற்றை
இதழ்
கனத்தது.

No comments: