வேறென்ன ...... காதல் தான்




இமைகளை மூடிக்கொள்

உன் இருவிழியின்

எல்லையற்ற வானவில்லை

என் இருவிழியால்

உள் வாங்கி கொள்ள

முடியவில்லை .

சற்று

இமைகளை மூடிக்கொள்

நின்று செறித்து கொள்கிறேன்.

*********************

நேற்று

என்கனவில்

நிலவொன்று

உருகி உருகி

வழிந்து கொண்டிருந்தது

வெள்ளை நதியாய்

என் நிலத்தில்.

நதியில் ஒன்றிரண்டு

நட்சத்திரங்களும்

விழுந்து மூழ்கின.

என் பொழுதுகள்

அனைத்தும் மிதந்து

கொண்டிருந்தன

கரை ஒதுங்க மனமில்லாமல் .

எனக்கு தெரியும்

நிலவாய் நீதான் என்று.

***************************

No comments: