சென்றுன் எதிரியை தேடு *


நீ வளர்த்த

பூனையின் மயிர்க்கால்களிலும்
தண்ணீர்பாம்பின் உடலிலும்
ஒட்டியிருக்ககூடும்.

வெவ்வேறு வெளிச்சத்தின் சாயலுக்குக்கேற்ப
முகங்கள் மாறக்கூடும்
கூடுவிட்டு கூடுபாயவும் கூடும்.

நிதானித்த வேளை தோல் சாய்ந்த வேளை
வெப்ப தகிப்பின் 
பின்னிரவில் கண்விழித்த பொழுது
நண்பகல் மரணச்செய்தியின்
வெற்றுச் சுட்டில்.

இவ்வுலகின் இருண்ட
பகுதியுனுள்ளும்
சென்றுன் எதிரியை தேடு *
உன் நிழலிலும் கூட.

* ஆத்மாநாமின் கவிதை வரி

ஆத்மா நாம் படைப்புகள்
காலச்சுவடு வெளியீடு

No comments: