முடிவு

வறண்ட உதட்டை ஈரமாக்கினேன்
உலர்ந்த நாக்கு உப்பானது
அனேகமானவர்கள்
அலைபேசியிருந்தார்கள்
முன் தினம்
இறந்த போன முதியவரை
பற்றி எவ்வித சலனமில்லை
நின்று கொண்டிருக்கும் போதே
பாய்ந்துவிட்டார் என்றும்
உருக்குலைந்து போனார் என்றும்
சொன்னார்கள்
சென்று பார்க்க பயமெனக்கு
அதே தினத்தில்
சட்டைப்பையில் துழாவி
போதாது என தெரிந்திருந்தும்
நான் கொடுத்த பன்னிரண்டு ரூபாய்
வாங்கிய அப்பாவின் முகம்
ஏனோ நினைவு வந்தது

வெறுமையான
வயிற்றையும் சட்டைப்பையும்
மறுமுறை தொட்டு பார்த்தேன்

இதே இடம்
நாளையே இயல்பாக இருக்கும்
எப்பொழுதும் போல்
'கடைசி தொடர்வண்டி'
வ ந் து கொண்டிரு ந் தது

No comments: