மீறு


வளையலனி
பொட்டிடு
பூச்சூடிக்கொள்
சேலை மட்டுமே
உடுத்து
உதட்டில் சிரி
உள்ளுக்குள் அழு
ஆடவர் என்றால் தலைகுனி
பெண் என்றால் வாயைமூடு
கவிதையாவது கதையாவது
கோலங்கள்
சமையல் தவிர
வேறு பக்கங்கள்
பார்க்காதே
பிடித்தவற்றை மறந்து போ
ஆம், நம்பு
இன்றிலிருந்து நீ
'மனைவி' யாக சமைக்க பெற்றாய் .

2 comments:

சி.கருணாகரசு said...

"மீறு" மிக அருமை, கவிதை சும்மா நச்சினு இருக்கு. இப்படிதான் எதிர்பார்த்தேன் வாழ்த்துக்கள் தோழரே.

velkannan said...

தோழர் சி.கருணாகரசுக்கு நன்றி