தூக்கு


வீசியெறிந்த
ரொட்டித்துண்டாய்
மெளனம்
பூஞ்சையுற்றிருக்கும்

உடைந்த கண்ணாடி
துண்டுகள் ரீங்காரமிட்டு
முறமான காதுக்குள்
கூடு கட்டும்

ஆயிரமாயிரம்
புரவியின் குளம்புகள்
வேற்றிடம் மாறாது
ஒரிடத்திலியே
சப்தங்களை
அரைகுறையாய்
கடித்து துப்பும்

நீள மீட்சியின்
வெளிச்ச புள்ளிக்குள்
சீழ்பிடித்தவற்றை
கணல் வைத்து
பொசுக்கும்

ஒரு பிடி
காற்றை பிடிக்க
முயன்று
துவண்டு விழும்
தெறிக்கும்
விரல்கள்

வெற்று
கழிவுகளை
பிடுங்கியெறிந்து
புழுவெனக் கோணிக்
கொள்ளும் நாக்கு

முன்பு
பெய்த
பெருமழையை
எண்ணி திரும்ப
மனமில்லாமல்
மேல்குத்தும்
விழிகள்





No comments: