நான் நானாகவே......


உங்களிடம் சொல்வதற்கு காரணம் உண்டு
உங்களிடம் சொன்ன பிறகாவது
இவ்வண்ணம் நிகழாமல் இருந்தால்
மகிழ்ச்சி தான்.

கனவுகளில்
என்னையே நான்
பார்த்துக்கொள்கிறேன்.

கடலில் மிதக்கும் என்னை
நெருப்பில் வேகும் என்னை
பாறையில் சிதறும் என்னை
சேலைதலைப்பில் முகம் புதைக்கும் என்னை
துரத்தும் பாம்பிலிருந்து மேலெழும்பி பறக்கும் என்னை
தலை சிதறி துடிக்கும் என்னை


'தள்ளி நின்று பார்ப்பது பிராப்தம்'
என்கிறான் நண்பன்


நானோ
மிதவையாக வெந்த உடலாக
தெறித்த பிண்டமாக தாயின் இளஞ்சூடாக
காற்றில் இறகாக
பீறிட்டு எழும் வலியாகவே
உணர விரும்புகிறேன்

வாழ்வு என்பது வாழ்தல் தானே
கனவிலும்.

உங்களிடம் சொன்ன பிறகாவது ......

No comments: