மரண கிணறு

...குழந்தைகளின்
கண்கள் கட்டப்பட்டன
கட்டியவர்களின் வாயும் அடைக்கப்பட்டது
அடைக்கப்பட்டவர்களின் கைகளும் பிணைக்கப்பட்டன
பிணைக்கப்பட்டவர்களின் கால்களும் இறுக்கப்பட்டன
இறுக்கப்பட்டவர்களின் பால் உறுப்புகளும் சிதைக்கப்பட்டன
சிதைக்கப்பட்டவர்களின் தலைகளும் கொய்யப்பட்டன
கொய்யப்பட்டவர்களின் வீடுகளிலிருந்த
குழந்தைகளின்
கண்களும் கட்டப்பட்டன..........

3 comments:

வண்ணத்துபூச்சியார் said...

ம்.

சி.கருணாகரசு said...

மரணக்கிணறு போல கவிதையும் தெளிவாக வட்டம் அடிக்கிறது. நல்லா இருக்கிறது.

கண்ணன் said...

வண்ணத்துபூச்சியார் மற்றும் சி.கருணாகரசு அவர்களுக்கும் நன்றி நன்றி