எங்கள் ஊர் வரைப்படம் (கோடுகளால்அல்ல நிகழ்வுகளை கொண்டு.....)

மேலத்தெருவுல வித்துட்டு
கீழத்தெருவுக்கு வந்தான்
பஞ்சுமிட்டாய்க்காரன்
ஒண்ணா தான் இருக்கு
சிரிப்பும் இனிப்பும்
--------------------------------
குலுங்கி குதிச்சு
வந்துபோச்சு
மினி பஸ்ஸு
--------------------------------
ரம்மும் கையுமா
நல்லாத்தான் இருக்காரு
சுருட்டு தாத்தா
---------------------------------
இந்த வருட திருவிழாவிற்கும்
ஓடவில்லை
ஆத்து தண்ணி
------------------------------------
வீடு வீடாய் பிடித்தாட்டியது
வண்ணத்தொலைக்காட்சி
---------------------------------
சாமியாடி தாத்தா
சைவத்துக்கு மாறியாச்சு
---------------------------------
ஏச்சு மட்டும் குறையல
---------------------------------
கதைச்சொல்லி
அரிதானது
பக்கத்தூர்
பெரியப்பா சாவு
SMS - ல் வந்தது
-----------------------
ஊருக்குபோய் வந்த போது
சைக்கிள் கடை மாமா கேட்டார்
'சாதி சனமெல்லாம் எப்படியிருக்கு?'
நினைத்துகொண்டேன்
சாதி இருக்கும் வரை.....
சனம் எப்படி?
-----------------------------------
நிகழ்வுகள் தொடரும்........

No comments: