உறங்காத பெரு வெளி

கதைகளின்
ஆரம்ப வரிகளில்
உறங்கிபோகிறாள்
சின்ன பாப்பா
இடை இடையே
கேள்விகளால்
ஆக்கப்பட்டிருந்தான்
பெரியண்ணன்
விடு கதைகளின்
விடைகளை
தேடி அலைகிறான்
உதய குமாரன்
பெருங்காடுகளில் .,
அலைந்து திரிந்த
குளம்பொலி
புலம்புகிறது
அங்கும் இங்கும்
கதை சொல்லி
பின்னொரு நாளில்
உறங்க கூடும்
என்று உறங்கும்
கதைகளும் விடுகதைகளும்

உயிரோசை 28.09.2009 இணைய இதழ் வெளியானது

நன்றி : உயிரோசை

10 comments:

Kalyani Suresh said...

சின்ன வயசுல பாட்டியிடம் கதை கேட்ட ஞாபகம் வருது கண்ணன்.

கண்ணன் said...

கல்யாணி சுரேஷ் -ன்
தொடர்ந்த வாசிப்பிற்கும் கருத்துக்கும் நன்றி

சி.கருணாகரசு said...

க‌(வி)தை நல்லா இருக்கு கண்ணன்.

கண்ணன் said...

தோழர் சி.கருணாகரசு - க்கு நன்றி

ஹேமா said...

கண்ணன் வாழ்வில் கேள்வியும் பதிலும் தேடுதலும் முடிவிலி.

கண்ணன் said...

ஹேமா விற்கு நன்றி

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லா இருக்கு கண்ணன்.

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அந்தக் கதைகளினதும் விடுகதைகளினதும் தாலாட்டினைக் மீண்டும் கேட்க ஆசைதான்...

தொடருங்கள்

கண்ணன் said...

நன்றிங்க பா.ரா !

கண்ணன் said...

நண்பர் கனவுகளின் காதலனுக்கு நன்றி