நிறுத்தம்

சவுக்கால்
தன்னையே அடித்து கொள்ளும்
இளைஞனின் கால் சலங்கையொலிக்கேற்ப
இடுப்பசைத்தபடியே
முதுகின் வழி பாதம் தொடும்
சிறுமி.


அதிர்ந்து பார்க்கும் என்னுடைய
வலது மணிக்கட்டை தொட்டு
'பசிக்குதுண்ணா'
என்றபடி கைநீட்டும் பெண்.


செல்லும் பேருந்து வந்து விட்டது.

என்னிடம் இருப்பது ஒன்றுதான்.
பயணத்தை தொடங்கவில்லை
இன்னும் நான்.

 நன்றி:  தமிழ்த்தோட்டம்

13 comments:

மண்குதிரை said...

நன்று நன்பரே

அன்புடன் நான் said...

மனம் அங்கே நிற்கிறது அப்படியா...?
அல்லது... பயணத்திற்கானது... பசியாற்றியதா...?

கவிதை சிறப்பு. வாழ்த்துக்கள் தோழரே.

கல்யாணி சுரேஷ் said...

அரை ஜாண் வயிற்றுக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள்? தன் முதுகு தொடும் சிறுமியை பற்றி படிக்கையில் எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் கூட இது போன்ற காட்சிகளை பார்த்த நினைவு வருகிறது கண்ணன்.

தமிழ் உதயம் said...

வறுமையையும், மன உணர்வையும் வெளிப்படுத்திய கவிதை. கவிதை நன்று

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

உங்கள் பயணம் தொடங்கும் வேளையில்
அந்த சின்னத் தேவதையின் சிரிப்பு உங்கள் ஜன்னல் அருகில் தொடர்ந்துவர வேண்டுகிறேன்.....

அருமை.

இன்றைய கவிதை said...

மனதைத் தொடும் வரிகள்!
கலக்குங்க வேல்!

-கேயார்

ஹேமா said...

அங்கங்கே மனிதம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது கண்ணன்.

உயிரோடை said...

க‌விதை ந‌ன்று வேல்க‌ண்ண‌ன்

rvelkannan said...

மண்குதிரைக்கு எனது நன்றியும் அன்பும்
*****************************
தோழர் கருணகரசுக்கு மிகுந்த நன்றி
//மனம் அங்கே நிற்கிறது அப்படியா...//
அப்படியே தோழரே
*****************************
தோழி கல்யாணி சுரேஷ்க்கு நன்றி
//எங்கள் ஊர் பேருந்து நிலையத்தில் கூட இது போன்ற காட்சிகளை பார்த்த நினைவு வருகிறது//
நாமக்கல் பேருந்து நிலையத்தில் நடந்த நிகழ்வே இது தோழி
*****************************
தமிழ் உதயம் அவர்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியே
***************************
நண்பர் கனவுகளின் காதலனுக்கு எனது நன்றியும் அன்பும்
//சின்ன தேவதை// அடடா... எனக்கு தோன்றாமல் போய்விட்டதே நண்பரே
**********************
இன்றைய கவிதை நண்பர் கேயார் - க்கு நன்றி
மற்ற நண்பர்களக்கும் எனது அன்பை சொல்லவும்
************************
தோழி ஹேமாவிற்கு மிகுந்த நன்றியும் அன்பும்
//அங்கங்கே மனிதம் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது//
நிச்சயமாக... அந்த நம்பிக்கை எனக்கும் பெரிதும் இருக்கிறது தோழி.
**************************
உயிரோடை லாவண்யாவிற்கு எனது நன்றியும் அன்பும்

பா.ராஜாராம் said...

உலுக்குது வேல்கண்ணா..

காட்சி படுத்துதலும் சொற்கட்டும்,முடிவும் பிரமாத படுத்தி இருக்கிறீர்கள்..வெகு நாட்களுக்கு மனசில் நிற்க போகிற கவிதை!

rvelkannan said...

நன்றி பா.ரா

மிருணா said...

அழ வைக்கிற இந்த நிகழ்வுகள் நம் முயற்சி பயணத்தை துவக்க உந்தலாய் உங்கள் எழுத்து.இது போல நிறைய எழுதுங்கள்.நன்றி.

rvelkannan said...

//இது போல நிறைய எழுதுங்கள// முயற்சி செய்கிறேன் தோழி...
நன்றி சைக்கிள்