இவையனைத்தும்...நேற்றுவரை நிதர்சனமானவைகள்
பொய்த்து போகிறது
திசைகள் அற்ற
நட்ட நடு பாலைவனத்தில்
கம்பளி போர்வையில் கிடக்கிறேன்
உள்நாக்கின்
அமிலரசம் அழுகிய வீச்சமடிக்கிறது
அவசர அவசரமாக சேகரித்து கொண்ட
ஒன்றிரண்டு நீர் திவலைகளும்
காய்ந்து விட்டது
இருளின் துணையோடு கருநாகங்கள்
சூழ்ந்து கொள்கிறது
கதறிய கண்ணீரின் முடிவிலும்
ஆறுதலற்று அலைகிறது மனம்

இவையனைத்தும் மாறிப்போகிறது
கழுத்தை இறுக்கிய
பிஞ்சுகரங்களில்

(வேல்விழிக்கு..)

04.01.2010 உயிரோசை இணைய இதழில் வெளியான கவிதை

நன்றி : உயிரோசை

21 comments:

கல்யாணி சுரேஷ் said...

//இவையனைத்தும் மாறிப்போகிறது
கழுத்தை இறுக்கிய
பிஞ்சுகரங்களில்//
எல்லா இடர்களையும் புரட்டி போடும் வலிமை பிஞ்சு கரங்களுக்கு இருப்பது உண்மைதான். ( வேல்விழிக்கு எனது அன்பு முத்தங்கள்.)

கல்யாணி சுரேஷ் said...

me the first. :)

ஹேமா said...

என்ன கண்ணன் ...கனவா ?

velkannan said...

கல்யாணி சுரேஷ் முதன்மைக்கும் கருத்திற்கும் நன்றியும் அன்பும்
***************
ஹேமா...
என்னது.... கனவா.... சரியா போச்சு...
ஒருவேளை இவைகள்(முதல் பத்தி) கனவு என்றால் மகிழ்கிறேன்.
முதல் பத்தி முழுவதும் வெளி உலகின் நிஜங்கள்.
இருப்பினும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஹேமா

கனவுகளின் காதலன் said...

கவிதையின் முடிவு வரிகள் அற்புதம் நண்பரே, மந்திர விரல்களல்லவா அவை.

பலா பட்டறை said...

இவையனைத்தும் மாறிப்போகிறது
கழுத்தை இறுக்கிய
பிஞ்சுகரங்களில் //

ஆஹா..அற்புதம்.::))

velkannan said...

நண்பர் கனவுகளில் காதலனுக்கு நன்றியும் அன்பும்
***********
பலா பட்டறை ஷங்கர் மிக்க நன்றி

பா.ராஜாராம் said...

//நேற்றுவரை நிதர்சனமானவைகள்
பொய்த்து போகிறது
திசைகள் அற்ற
நட்ட நடு பாலைவனத்தில்
கம்பளி போர்வையில் கிடக்கிறேன்
உள்நாக்கின்
அமிலரசம் அழுகிய வீச்சமடிக்கிறது
அவசர அவசரமாக சேகரித்து கொண்ட
ஒன்றிரண்டு நீர் திவலைகளும்
காய்ந்து விட்டது//


உங்களுக்கு என ஒரு தனி இடம் இருக்கு வேல்கண்ணா.அதை நீங்கள் மட்டுமே நிரப்ப இயலும்.

thenammailakshmanan said...

அருமை வேல்கண்ணன் பாரா சொன்னதை வழி மொழிகிறேன்

மாதவராஜ் said...

குழந்தையின் ஸ்பரிசம் எவ்வளவு அற்புதமானது, மகத்தானது...!! வாழ்த்துக்கள் வேல்கண்ணன்.

கமலேஷ் said...

மிகவும் நன்றாக இருக்கிறது....உழவர் திருநாள் வாழ்த்துக்கள்...

velkannan said...

மிக்க நன்றி பா.ரா

மிக்க நன்றி தேனம்மை

மிக்க நன்றி மாதவராஜ், எனது தளத்தில் உங்களின் முதல் கருத்து
ஊக்கத்தை தருகிறது

மிக்க நன்றி கமலேஷ்

சி. கருணாகரசு said...

கவிதை நல்லாயிருக்குங்க
அடிக்கடி வர இயலாமைக்கு வருந்துகிறேன். தோழருக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

velkannan said...

தோழர் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி
நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்

இன்றைய கவிதை said...

ஏறக்குறைய இதே போல் நான் எழுதியது...(பாமரத்தனமாய்!)

http://inkavi.blogspot.com/2009/10/4.html

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

-கேயார்

மண்குதிரை said...

ரொம்ப நல்லா இருக்கு சார்

velkannan said...

இன்றைய கவிதை நண்பர்களுக்கு நன்றி
படித்தேன் இயல்பான நடையில் அருமையாக இருந்தது.
******

மண்குதிரைக்கு மிக்க நன்றி

உயிரோடை said...

லாஸ்ட் லைன் டிவிஸ்ட் பிடித்தது. ஜோக் அப்பார்ட், கவிதை மொழியும் கவிதையும் நல்லா இருக்குங்க வேல்கண்ணன்

velkannan said...

உயிரோடை லாவண்யாவிற்கு மிகுந்த நன்றியும் அன்பும்

rameshskr said...

நல்லா இருக்கு சார்

velkannan said...

Thank u Ramesh