நீ அணிந்திருந்த புடவையின்
சரிகையிலிருந்து உதிர்ந்த
வண்ணத்துப்பூச்சியின்
மகரந்தங்களை ஏற்கத் தயங்கிய
மலரை வாஞ்சையோடு
உன்விரல்கள் தொடுகையில்
பளீரிட்ட செடியை
எனது சன்னலின் அருகில்
வேர் மண்ணோடு
இடம் பெயர்த்தேன்
அறையெங்கும்
பரவின
ஒளியும் உனது வாசனையும்
பின் மலர்ந்த
வண்ணத்துப்பூச்சியெல்லாம்
உன்னை நோக்கியே
பயணிக்கின்றன
நன்றி : உயிரோசை
9 comments:
வேல்கண்ணன்,
அப்புறம் எப்படி நிம்மதியா தூங்க முடியுது உங்களால?
ம்ம்ம்ம்...! ஸென்சிடிவ் லைன்ஸ்.!
நண்பரே,
அருமையான, அழகான, மென்மையான வரிகள்.
மிக நன்றாக இருந்தது வேல்கண்ணண்!
வாழ்த்துகள்!
நல்ல கவிதை வேல்கண்ணன்.
அடடா மிக அருமை வேல் கண்ணன்
வாவ் கவிதை ரொம்ப நல்லா இருக்கு வேல் கண்ணன்.
உயிரோசையில் வந்தமைக்கு வாழ்த்துகள்
ஊக்கமும் உற்சாகமும் தரும்
தோழமையான
சத்ரியன்
கனவுகளின் காதலன்
ஜெனோவா...
செல்வராஜ் ஜெகதீசன்
தேனம்மை
உயிரோடை லாவண்யா
அனனவருக்கும் எனது அன்பும் நன்றியும்
ரொம்ப நல்லாருக்கு வேல்கண்ணா!
மிக்க நன்றி பா.ரா
Post a Comment