1.
சட்டென்று
கவிழ்ந்த இருளில்
மீண்டு எழுகிறது
மெளத்தின் ஓசை
2.
இரைச்சலால் நிரம்பி
நெரியும்
தனிமையின் இருத்தல்
தெறிக்கிறது
குதித்தோடும் சிறுமியின்
சிணுங்கிய
கொலுசொலியில்
3.
எரியும்
மரங்கள்
கேட்கிறது
வீணை
அழுமோசை
4.
இழவு வீட்டின் விடிகாலை
ஓலம்
பிற்பகலில் தேய்வது
வரை...
நினைவுக்கு வருகிறது
நகர
ஒண்டுக்குடித்தனத்தில்
நடுநிசியில் கேட்கும்
குழந்தையின் வீறிட்டலில்
5.
ஒரே ஒரு
துளிதான்
ஓயாது கடலோசை
6.
ஒரு ஆழ்கிணறு
ஒரு கரும்பாறை
ஒரு கூழாங்கல்
ஒரு பூக்காத செடி
சலனமில்லாத நீரோடை
மீளாத தனிமையில்
கேட்கிறது
பிரிவின் வலியோசை
7.
கர்ப்பகிரஹத்தில்
எதிரோலிக்கிறது
கருவறையற்றவளின்
விசும்பலோசை.
நன்றி : இனிது இனிது - இலக்கிய இதழ்
இனிது இனிது தொடர்ப்புக்கு : அ. கார்த்திகேயன்.
அலைபேசி : +91 9952722942
**************************************************
11 comments:
சப்த ஓசை அருமை வேல் கண்ணன்
நண்பரே,
மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள், அதிலும் 3,மற்றும் 7 ஆகியவை அழைத்துச் சென்று தந்த உணர்வுகள் உயிர்ப்பானவை. மிகவும் அருமை.
//எரியும்
மரங்கள்
கேட்கிறது
வீணை
அழுமோசை//
//ஒரே ஒரு
துளிதான்
ஓயாது கடலோசை//
வாசித்து வாசித்து நிறைகிறேன் வேல்கண்ணா!
வாழ்த்துகள் வேல் கண்ணன்.
முதன்மைக்கும் கருத்துக்கும் நன்றி தேனு ,
*********
நண்பர் கனவுகளில் காதலுனுக்கு நன்றி
*********
அன்புள்ளம் கொண்ட பா.ராவிற்கு நன்றி
*********
இனிய தோழி உயிரோடை லாவண்யாவிற்கு நன்றி
எரியும்
மரங்கள்
கேட்கிறது
வீணை
அழுமோசை....
வாசித்து வாசித்து ugalathu kavithaikalai nesikiren! RAMESH K
வாழ்த்துகள் வேல் கண்ணன்.
அன்பும் நன்றியும் ரமேஷ்-க்கு
அன்பும் மகிழ்வும் செல்வராஜ் ஜெகதிசன் -க்கு
படிக்க படிக்க அருமை ததும்புகிறது
மிகவும் ரசித்தேன் வேல்கண்ணண்...
நன்றி ஜேகே
நன்றி ஜே.கே வருகைக்கும் கருத்திற்கும்
எத்தனை ஓசைகள்.. எத்தனை உணர்வுகள்.. அருமை,
முதல் கவிதையில் அது மௌனத்தின் ஓசை என்றிருக்கவேண்டுமோ..
Post a Comment