விடியாமல் போகட்டும்
இரவின் வானில் யாழினி விளையாடிக்கொண்டிருக்கிறாள்
கருநீலத்தைக் குழைத்துப்பூசிக்கொள்கிறாள்
நேற்றைய மழையின் வாசம் வீசிக்கொண்டுதான் இருக்கிறது.
பறவைகளின் பாதைகளில் அவள் விளையாடவில்லை.
அவள் மிதக்க விட்ட காகித மேகங்களின்
நடுவே விளையாடின வண்ணத்து பூச்சிகளும்.
மென்ஒளி நிலவில்
பறித்த விண்மீன்களைப் பத்திரப்படுத்துகிறாள்
என் அறிமுக இடர்ப்பாடுகளைத் தவிர்த்துவிடுகிறேன்
பிரபஞ்சம் விடியாமல் போகட்டும்
நன்றி: உயிரோசை
~ ~ ~
15 comments:
excelent வேல்கண்ணா!
நீங்கள் வர்ணித்திருக்கும் அந்த இரவே ஒரு அழகுதான்.
விடியாமலே போகட்டும்!
:)
அழகும் இனிமையும் கலந்தோடும் வரிகள் நண்பரே.
:-)
அருமை வேல்கண்ணன்.
வாழ்த்துகளும் கூட.
அண்ணன் பா. ரா
தோழி ஹேமா
நண்பர் D.R அசோக்
நண்பர் கனவுகளின் காதலன்
நண்பர் ஆறுமுகம் முருகேசன்
தோழி லாவண்யா ...
அனைவருக்கும் நன்றியும் வணக்கமும்
கருநீலத்தைக் குழைத்துப்பூசிக்கொள்கிறாள் யாழினி - உங்கள்
கவிதையைக் குழைத்துப் பூசியிருக்கிறது இந்தப் புகைப்படம். :)
வாங்க கார்த்திகா .. வணக்கம் உங்களின் கருத்துக்கும் நன்றி புகை படத்திற்கான பாராட்டுகள் உயிரோசையை சாரும்.
அருமையா இருக்கு நண்பா..
எனக்கு மிகப்பிடித்திருந்தது நண்பரே ! நீங்கள் சொன்ன மாதிரி விடியாமலே போகட்டும் :)
கொள்ளை கொள்ளும் கவிதை...மிக நன்றாக இருக்கிறது...
அன்புக்குரிய நண்பர்கள்
உழவன் , ஜெனோவா, கமலேஷ் -க்கு நன்றியும் மகிழ்ச்சியும்
இனிமையான சூழலை எழுப்புகிற வரிகள்.
நன்றி சைக்கிள்
Post a Comment