சுய தேடல்


கருமை பீடித்த குகையில்
என் இரவுகள் கரைகின்றன
வாசல் தேடி.

சுவர்களை
பீறாண்டுவதற்கு வளர்த்த நகங்கள்
பிடுங்கி எறியப்பட்டன

எண்ணற்ற
ரீங்காரத்திலிருந்து விடுபட துடிக்கிறது
சரிகமபதநி

கனியாகும் வரை
காத்திருக்க வாயக்கவில்லை
பசியாற்றுவதற்கு

தொலைத்தவர்கள் தான் தேடவேண்டுமாம்
தொலைத்ததும் நானே
தொலைந்ததும் நானே
தொடர்ந்தும் தேடுகிறேன்
தொடர்ந்தும் தொலைகிறேன்
 
எழுதி தீராத
இந்த கவிதையிலும்.

நன்றி :  உயிரோசை 

16 comments:

உயிரோடை said...

தேட‌ துட‌ங்கி வீட்டீர்க‌ள் அல்ல‌வா சீக்கிர‌ம் கிடைக்க‌ பெறுவீர்க‌ள். வாழ்த்துக‌ள் வேல்க‌ண்ண‌ன்

கமலேஷ் said...

கவிதைக்குள் தொலைந்து போதல் என்று சொல்வார்களே...அது இதுதான் போலும்...
மிகவும் நன்றாக இருக்கிறது..தோழரே...வாழ்த்துக்கள்..

செல்வராஜ் ஜெகதீசன் said...

வாழ்த்துக‌ள் வேல்க‌ண்ண‌ன்.

ஆறுமுகம் முருகேசன் said...

கவிதை மிகவும் நன்றாக இருக்கிறது கவிஞரே !!

ஹேமா said...

களைப்பில்லாத நம்பிக்கையோடான தேடல் நிச்சயம் தேவை வாழ்வுக்கு.நல்லதொரு கவிதை கண்ணன்.

thenammailakshmanan said...

தொலைத்தவர்கள் தான் தேடவேண்டுமாம்
தொலைத்ததும் நானே
தொலைந்ததும் நானே
தொடர்ந்தும் தேடுகிறேன்
தொடர்ந்தும் தொலைகிறேன்.//

அற்புதம்.. வேல்கண்ணன்..

D.R.Ashok said...

:)

இன்றைய கவிதை said...

அற்புதம் நல்ல கவிதை ,

தொலைவதும் தேடுவதும் தொடர்கதை என அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்


நன்றி ஜேகே

சி. கருணாகரசு said...

தேடலைச் சுவாசி!

சி. கருணாகரசு said...

வலையமைப்பு சிறப்பு தோழர்.

ஜெனோவா said...

எதையும் தேட இப்போதைக்கு மனமில்லை ... தொலைந்தது தொலைந்தே போகட்டும் ...


நீங்களாவது தேடுங்கள் நண்பா :)


அருமை !

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

அருமையான வரிகள்.

பா.ராஜாராம் said...

விட்டிருந்தது எல்லாம் வாசித்தேன் வேல்கண்ணா.

பிரமிக்கும்படியான பாய்ச்சலாக இருக்கிறது.

வாழ்த்துகள்!

velkannan said...

அன்பு உயிரோடைக்கு உங்களின் கருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி

தோழர் கமலேஷ்க்கு நன்றியும் அன்பும்

அன்பு செல்வராஜ் ஜெகதீஷ் -க்கு உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

நண்பர் ஆறுமுகம் முருகேசனுக்கு நன்றியும் அன்பும்

velkannan said...

தோழி ஹேமாவின் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

தோழி தேனுவின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

நண்பர் D.R அசோக் -க்கு நன்றியும் அன்பும்

இன்றைய கவிதை நண்பர்கள் அனைவருக்கும் மிகுந்த நன்றியும் அன்பும்

velkannan said...

தோழர் சி.கருணாகரசுக்கு வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
(வலை அமைப்பு பாராட்டுகள் போய் சேர்க்க கூகிள் குழுமத்திற்கு )

நண்பர் ஜெனோவிற்கு வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றியும் அன்பும்

நண்பர் கனவுகளின் காதலனுக்கு தொடர் ஊக்கத்திற்கு நன்றியும் அன்பும்

அண்ணன் பா.ரா -விற்கு உங்களின் வரிகளில் பெரும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் பெறுகிறேன் நன்றி அண்ணே