கனவின் மிச்சம்


முன்பே
ஒரு முறை
வந்திருந்ததன் மிச்சப்பகுதியாகியிருந்தது
கடைவாய்ப்பற்களிடையே
சிக்கியிருந்த மாமிசத்திலிருந்து
அழுகல் வீச்சம். அடர்இருளின் 
மூலையிலிருந்து அலறல் பீறிடுகிறது
அடிவயிற்றின் வன்பிசைவை
தொட்டபோது இளஞ்சூடாய்
ஒட்டிக்கொண்டது  தொப்புளின்
குருதிக் கசிவு;  திடுக்கிட்டு
எழுந்தபோது நெற்றிப்பொட்டில்
இடறியது வெண்சிலுவை

நன்றி : உயிரோசை
                ஜூலை 2010 , உயிர் எழுத்து 

11 comments:

ஜெனோவா said...

புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் எடுக்குமென்று நினைக்கிறன் நண்பா , மீள் வருகைக்கு பின் பார்க்கலாம் :)

Unknown said...

வேசியிடம் சென்றவனை பற்றியதான கவிதையா..?!

ஹேமா said...

ஏதோ கெட்ட கனவா கண்ணன் !
வெண்சிலுவை = வீபூதி !
திட்டாதீங்க.

பா.ராஜாராம் said...

ரொம்ப கஷ்ட்டமாய் இருக்கே வேல்கண்ணா.

அடுத்த தளம் நகர்ந்து விட்டீர்களோ? :-)

any hw, உயிரோசைக்கு வாழ்த்துகள்!

உயிரோடை said...

புரிய‌லை. :( வாழ்த்துக‌ள்

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

கன்னியாஸ்த்ரி ஒருவர் அனுபவித்த கொடுமைகளின் நினைவுகள்தான் மனதில் எழுகிறது. இது என் தவறான புரிதலாகவும் இருக்கலாம்.

SIVAKUMAR said...
This comment has been removed by the author.
SIVAKUMAR said...

நண்பரே,

கவிதை வரிகள் நன்றாக உள்ளது, ஆனால் பலவிதமான கருத்துக்களை சொல்ல விழைக்கிறது போல உள்ளது. எனக்கு,தாயின் வயிற்றிலிருந்து வெளிவரும் ஒரு குழந்தையின் கனவு??!

இன்றைய கவிதை said...

வேல்கண்ணண்,

வார்த்தை பிரயோகம் அருமை
சற்றே கடினமான யோசிக்க வைக்கும் ஒரு கவிதை

நன்றி வேல்கண்ணண்

ஜேகே

அன்புடன் நான் said...

புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன் .....
எல்லோரும் கருத்து சொன்ன பிறகு நீங்களும் கொஞ்சம் சொல்லிடுங்க தோழர்.

துரோகி said...

// புரிந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன் ..... //
அதே!