வெண் சிலுவை

இவர் ஒரு சிறுகதையை எழுத வேண்டிய பகுதிகளை மட்டும் எழுதி,
எழுதாமல் வாசகர்கள் புரிந்து கொள்ள நிறைய இடங்களை உண்டாக்கித் தருகிறார்
                                                                                                                                     பிரபஞ்சன்

இவரைப்போல விலகி இருந்து இந்து முஸ்லீம் பிரச்சனையை எழுதியவர்கள் யாரும்கிடையாது. இந்தப்புத்தகத்தை இலக்கிய வாசகன் எந்த அளவுக்கு படிக்க வேண்டுமோ அதைக்காட்டிலும் படைப்பாளிகள் படிக்க வேண்டிய படைப்பு.
                                                                                                 ந. முருகேசபாண்டியன்

மேலே சொன்ன இவர் என்ற பெருமைக்குரியவர் : சாதத் ஹசன் மண்ட்டோ
இவரைப் பற்றி இன்னும் தெரிய  மதுமிதாவின்  இந்த பதிவு

தூய்மையை நேசித்தவன் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்சில மாதங்கள் முன்பு  திரு. மாதவராஜ் அவர்களின் இந்த பதிவை 

அதிரவைத்த ஒரு ஆவணப்படம்!  பார்த்து மிகவும் அதிர்ந்து போனேன்.  அவ்வப்போது அதிரவைப்பது  (உண்மையை சொல்லி) அவரின் பாணி என்று தொடர்ந்து வாசிப்பவருக்கு தெரியும். மேலும் பதிவை பார்த்த பின்பு மண்ட்டோவின் எழுத்துகள் நினைவுக்கு வந்தது. பதிவில் இருந்த ஆவணப்படம் எடுக்கபட்ட காலமும் மண்ட்டோ  எழுதிய காலமும் களமும் வேறு வேறு. ஆனாலும் தொடர்பு இருப்பதை நினைத்து வருந்த தான் வேண்டியிருக்கிறது. மண்ட்டோவின் 'திற' என்ற கதையை  தழுவி  எழுதப்பட்டது தான் கனவின் மிச்சம் 

இது ஷகினாவின் வலி. இதில் மறுக்கமுடியாத உண்மை இந்த வலி நாம் கண்முன்னே நடந்து கொண்டே தான் இருக்கிறது இன்னமும்.  

 வெண் சிலுவை என்பது ஒரு குறியீடு மட்டுமே : இதன் பொருளாக 

தூய ஒளி அல்லது அடர் இருள்,  

விடுதலை அல்லது  வெறுமை , 

மனதெளிவு அல்லது மனபித்து

இதில் நீங்கள் எதையும் தேர்வு செய்து கொள்ளலாம்   - கதையை படித்த பின்பு.

இனி  க(வ)தையிலிருந்து சில :

*......எவரோ தன்னுடைய குழந்தையை தேடிக்கொண்டிருந்தார், எவரோ தன்னுடைய தாயை , எவரோ தன்னுடைய மனைவியை , எவரோ தன்னுடைய மகளை .... முழுவதுமாக அசதியுற்ற சிராஜூதின்  ஓர் ஓரமாய் உட்கார்ந்து கொண்டார்.

*...........அவரின் சிந்தனை ஷாகினா தாயின் இறந்த உடலோடு நின்றது. குடல் தனியே கிடக்க அதன் அருகில் அவளின் உயிரற்ற உடல்.
அதற்கு மேல் அவரின் நினைவுகள் நகர மறுத்தது.

*சிராஜூதினால் இதை மட்டுமே சொல்ல முடிந்தது: 'ஐயா ... ஐயா .... நான் அவளை பெற்றவள்'

*......டாக்டர் ஸ்டிரெச்சரில் கிடந்த அந்த உடலைப்பார்த்து அதன் நாடித்துடிப்பைப் பரிசோதித்தார். பிறகு சிராஜூதினிடம்  ஜன்னலைக் காண்பித்துச்சொன்னார்.  "திற".  ஸ்டிரெச்சரில் இருந்த உடல் சில அசைவுகளைக் காட்டியது. செயலற்று கிடந்த அதன் கைகள், இடுப்பில்
கட்டியிருந்த நாடாவை அவிழ்த்தது. பிறகு ...........

____________________
*   மண்ட்டோ:  ஒப்பற்ற கலைஞன். இவரின் படைப்புகளை அவசியம் அனைவரும் படிக்கவேண்டும் என்பது என் விருப்பம்.
'திற' வை தழுவி குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டதாக அறிகிறேன்
(கிடைக்கும் இடம் தெரியவில்லை ) அதனின் டிரைலர் இங்கே

 'திற'(open it)

கருத்து சொன்ன(கேட்ட)  அனைத்து நண்பர்களுக்கும் மிகுந்த நன்றியும் அன்பும்

( மண்ட்டோ படைப்புகள் : தமிழில் : ராமாநுஜம் வெளியீடு : நிழல் , 31 / 48 இராணி அண்ணாநகர் , சென்னை,  E-mail : nizhal_2001@yahoo.co.inநன்றி : மாதவராஜ் , மதுமிதா , திண்ணை.காம், நிழல் பதிப்பகம்  

3 comments:

ஆறுமுகம் முருகேசன் said...

நன்றிகள் பல நண்பரே..

கனவுகளின் காதலன் said...

நண்பரே,

மண்டோவின் சிறுகதை தொகுப்பு ஒன்று இன்னமும் பிரிக்கப்படாமலே பெட்டிக்குள் காத்திருக்கிறது. படிப்பதற்கு காலம் உகந்து வரவில்லை என்பதுதான் தற்போதைய நிலைமை. பகிர்விற்கு நன்றி நண்பரே.

velkannan said...

மீண்டும் எனது நன்றியும் அன்பும் ஆ.மு , கனவுகளின் காதலனுக்கு (தள்ளி போடாதீர்கள் படித்து விடுங்கள்)